Thottuvida artwork

Song lyrics

Thottuvida

தொட்டுவிடத் தொட்டுவிட

8488 views

Singer · P. Susheela, T. M. Soundararajan

Lyrics · Kannadasan

The lyrics

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்


முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து -
கன்னிமுன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
எட்டி எட்டி செல்லுவதைப் பார்த்து -
நெஞ்சைத்தட்டி தட்டி விட்டதடி காத்து..

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும் -
சொல்லைக்கொட்டிக் கொட்டி வர்ணனைகள் அளக்கும்
அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடிக்கும் -
இடைகெஞ்சிக் கெஞ்சிக் கையிரண்டில் தவிக்கும்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளத் துடிக்கும் -
கதைசொல்லிச் சொல்லிப் பாடங்கள் படிக்கும்
துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும் -
கன்னம்கிள்ளிக் கிள்ளி மெல்ல மெல்லச் சிரிக்கும்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Dharmam Thalai Kaakkum

Keep listening

More from this movie

  1. Dharmam Thalai Kaakkum தர்மம் தலை காக்கும்

    Sung by T. M. Soundararajan

  2. Hello Hello Sugama ஹலோ ஹலோ சுகமா

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  3. Moodu Pani Kulireduththu மூடுபனி குளிரெடுத்து

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  4. Oruvan Manathu ஒருவன் மனது ஒன்பதடா

    Sung by T. M. Soundararajan

  5. Paravaigale பறவைகளே பறவைகளே

    Sung by T. M. Soundararajan

  6. Thottuvida தொட்டுவிடத் தொட்டுவிட

    Sung by P. Susheela, T. M. Soundararajan