Yengay Yengay artwork

Song lyrics

Yengay Yengay

எங்கே எங்கே

5760 views

Singer · Karthikeyan & Chorus

Lyrics · Vairamuthu

The lyrics

எங்கே எங்கே மனிதன் எங்கே
மனிதன் உடலில் மிருகம் இங்கே
ஓநாய் கூட்டம் நரியின் கள்ளம் ஒன்றாய் சேர்ந்த உலகம் எங்கே
வலிகளா அந்த வரங்களா
வாழ்க்கை ஞானம் கொண்டேன்

ஓ ஹோ ஹோ

காதல் என்றால் கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்
உறவு நட்பும்

ஓ ஹோ ஹோ

பிம்பம் பிம்பம்

ஓ ஹோ ஹோ

உள்ளம் எங்கே நம்பும் நம்பும்
பொய்களின் கரைக்கு நடுவிலே போகுதே வாழ்க்கை நதி

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ 
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ



ஜனனம் உண்மை மரணம் உண்மை
தந்தானே கடவுள் தந்தானே
அந்த ரெண்டை தவிர 

யோ யோ

எல்லாம் பொய்யா

யோ யோ

செய்தானே மனிதன் செய்தானே
கடுகை பிளந்து காணும் போது
வாணம் இருந்திட கண்டேன்
நாம் உறவை திறந்து காணும் போது
உலகம் தெரிந்திட கண்டேன்
என் உடலைத் தொட்டால் நான் மனிதன் ஆனேன்
என் உயிரைத் தொட்டால் நான் கடவுள் ஆனேன்

ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ 
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ


இங்கே இங்கே மனிதன் இங்கே
இமயம் தாண்டும் இதயம் இங்கே
காடும் மரமும் என் காலில் பூக்கள்
குன்றும் மலையும் கூழாங்கற்கள்
சாம்பலில் உயிர்க்கும் பறவை போல்
சாதிக்கவே பறக்கின்றேன்
சாதிக்கவே பறக்கின்றேன்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Asal

Keep listening

More from this movie

  1. Yea Dushyantha ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா

    Sung by Kumaran, Surmukhi

  2. Kuthiraikku Theriyum குதிரைக்குத் தெரியும்

    Sung by Sricharan, Surmukhi

  3. Tottodaing அதிரி புதிரி பண்ணிக்கடா

    Sung by Mukesh, Janani

  4. Thalai Pola Varumaa தல போல வருமா

    Sung by Sunitha Menon

  5. Yengay Yengay எங்கே எங்கே

    Sung by Karthikeyan & Chorus

  6. Em Thandhai சிங்கம் என்றால்

    Sung by Bharathwaj