Maligayae Maligaiyae artwork

Song lyrics

Maligayae Maligaiyae

மல்லிகையே மல்லிகையே

56273 views

Singer · Anuradha Sriram, K. S. Chithra

Lyrics · Palani Barathi

The lyrics

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு

கண்கள் மட்டும் பேசுமா கைகள் கூட பேசுமா
உன் காதல் கதை என்னம்மா
உன்னைப் பார்த்த மாமனின் கண்கள் என்ன சொல்லுதோ
மறைக்காமல் அதைச் சொல்லம்மா
பக்கம் வந்தானா முத்தம் தந்தானா
காதில் கடித்தனா கட்டிப்பிடித்தனா
அவன் பார்க்கும்போதே உடல் வண்ணம் மாறும் அழகே
சரி தான் இது காதலின் அறிகுறிதான்

தாமரையே தாமரையே காதலிக்கும்
காதலன் யார் சொல்லு ஹே சொல்லு

மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி
காதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளைச் சொல்லடி
நீ மட்டும் நழுவாதேடி
அவன் முகம் பார்த்தால் அது பசி போக்கும்
அவன் நிறம் பார்த்தால் நெஞ்சில் பூப்பூக்கும்
உந்தன் கண்ணிரண்டில் மின்னும் வெட்கம் பார்த்தே அறிவேன்
சொல்லு உன் காதலன் யார் அம்மா

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி

மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு ஹே சொல்லு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Ninaithen Vandhai

Keep listening

More from this movie

  1. Vanna Nillave வண்ண நிலவே வண்ண நிலவே

    Sung by Hariharan

  2. Pottu Vaithu Poomudikkum பொட்டு வைத்து

    Sung by S. P. Balasubramaniam, Swarnalatha

  3. Unai Ninaithu உன்னை நினைத்து

    Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam, Sujatha

  4. Manisha Manisha மனிஷா மனிஷா

    Sung by Deva, Sabesh Kumar,Krishnaraj

  5. Un Marbile Vizhi ஆசை நாயகனே

    Sung by K. S. Chithra

  6. Maligayae Maligaiyae மல்லிகையே மல்லிகையே

    Sung by Anuradha Sriram, K. S. Chithra

  7. Ennavale Ennavale என்னவளே என்னவளே

    Sung by Anuradha Sriram, Mano