Oh Priyaa Priyaa artwork

Song lyrics

Oh Priyaa Priyaa

ஓ பிரியா ப்ரியா

24861 views

Singer · K. S. Chithra, Mano

Lyrics · Vaali

The lyrics

(ஹம்மிங்)ஆஆஆ...ஆ ......ஆஆஆ.....ஆ.......ஆஆஆ...ஆ ......ஆஆஆ.....ஆ............ம்ம்ம்....ம்ம்ம்

பல்லவி

ஆண்:ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது


பெண்:ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா
ப்ரியா
இணைந்திடாது போவதோ
வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது


ஆண்:தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி

(இசை)

சரணம்:1

பெண்;அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ஆண்:ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ
பெண்:எதனாலும் ஒரு நாளும் மறையாது பிரேமையும்
ஆண்:எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
பெண்:கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ.. ஆ ..நீ வா வா


ஆண்:ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
பெண்:ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

(இசை)

சரணம்:2

பெண்:காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது பாவம் அல்லவே
ஆண்:ஷாஜகானின் காதலி தாஜ்மஹல் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
பெண்:இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே
ஆண்:அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
பெண்:விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இங்கு வெற்றி கொள்ளுமே
இளங்கன்னி உன்னுடன் கூட வா வா


ஆண்:ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
பெண்:ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஆண்:ஏக்கம் என்ன பைங்கிளி 
என்னை வந்து சேரடி
பெண்:நெஞ்சிரண்டு நாளும் பாட 
காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Idhayathai Thirudathe

Keep listening

More from this movie

  1. Aathaadi Ammaadi ஆத்தாடி யம்மாடி

    Sung by K. S. Chithra

  2. Kaviyam Padava காவியம் பாடவா

    Sung by Mano

  3. Oh Priyaa Priyaa ஓ பிரியா ப்ரியா

    Sung by K. S. Chithra, Mano

  4. Oh Paapaa Laali ஓ பாப்பா லாலி

    Sung by Mano

  5. Kattukulle Paatu Sollum காட்டுக்குள்ளே பாட்டு

    Sung by K. S. Chithra, Mano

  6. Om Namaha ஓம் நமஹ உருகும்

    Sung by Mano, S. Janaki

  7. Vidiya Vidiya Nadanam விடிய விடிய நடனம்

    Sung by Mano