Kadhal Piriyamal artwork

Song lyrics

Kadhal Piriyamal

காதல் பிரியாமல் கவிதை

6925 views

Singer · Kamal Haasan

Lyrics · Vairamuthu

The lyrics

காதல் பிரியாமல் கவிதை தோன்றாது
கவியின் திரு ஏட்டிலே
பூக்கள் அழியாமல் கனிகள் தோன்றாது
கொடியின் வரலாற்றிலே

என்னை கவியாய்ச் செய்வாயா
இல்லை கனியாய்ச் செய்வாயா
பழி போடும் பாவையே
காதல் பிரியாமல் கவிதை தோன்றாது

நாயகி என்னை நீங்கியதாலே
வீடு வெறிச்சோடிப் போச்சு
நாப்புரம் கண்ணீர் சூழ்ந்ததனாலே
கட்டில் தீவாக ஆச்சு

மணமாகும் முன்பு கண்ணன் நானே
மணமான பின்பு ராமன் தானே
அடி சீதை நீ சொன்னால்
இந்த ராமன் தீக்குளிப்பேன்
இல்லை காற்றில் உயிர் கலப்பேன்....

காண்பவை எல்லாம் பிழை என்று கொண்டால்
வாழ முடியாது பெண்ணே
கயிறுகள் எல்லாம் பாம்பெனக் கண்டால்
கண்கள் உறங்காது கண்ணே

என் போர்வையோடு உந்தன் ரத்தம்
என் கண்களோடு கண்ணீர் தெப்பம்
வலையோடு தண்ணீர் நிற்குமா
உயிர் நீங்கி உடல் நிற்குமா
உந்தன் ஊடல் தீருமா ஆ... ஆ... (காதல்)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Panchatanthiram

Keep listening

More from this movie

  1. Ennodu Kathal Endru என்னோடு காதல் என்று

    Sung by Harini, Mano

  2. Kadhal Piriyamal காதல் பிரியாமல் கவிதை

    Sung by Kamal Haasan

  3. Naan Pena Nee Paper நான் பேனா நீ பேப்பர்

    Sung by Devan, Timothy, Mathangi

  4. Vandhaen Vandhaen வந்தேன் வந்தேன் மீண்டும்

    Sung by Kamal Haasan, Nithyasree Mahadevan, Sujatha Mohan

  5. Vai Raja Vai Un வை ராஜா வை உன் வலது கையை

    Sung by Srinivas, Shalini Singh