Vaaikalu Varappula Rakkozhi artwork

Song lyrics

Vaaikalu Varappula Rakkozhi

வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது

2123 views

Singer · SP. Balasubramaniam, S. P. Shailaja

Lyrics · Vali

The lyrics

ஆண் : வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது
ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது
பாவாட அணிஞ்ச நெலவு நீரோட தேடும் படகு
ஆத்தோரம் நடக்குது

பெண் : வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது
ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது
பாவாட அணிஞ்ச நெலவு நீரோட தேடும் படகு
ஆத்தோரம் நடக்குது

ஆண் : பால் நிலாவும் ஊர் உலாவும் பாதி சாமம்தான்
பசும் புல்லு பாயாச்சு தலகாணி நீயாச்சு
பெண் : ஜீவ நாத்தும் ஏரிக்காத்தும் சேரும் நேரந்தான்
எனக்கேதோ நெனப்பாச்சு பனி மூட்டம் நெருப்பாச்சு

ஆண் : தூங்காம ஏங்காதோ தங்கமானும்
தண்ணீரத் தேடாதோ கெண்ட மீனு

பெண் : வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது
ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது
ஆண் : பாவாட அணிஞ்ச நெலவு நீரோட தேடும் படகு
ஆத்தோரம் நடக்குது

பெண் : வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது
ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது

மூப்பு வந்த மாமனுக்கு முதுகெலும்பு இல்லையின்னு
சூப்பு வச்சுக் கொடுத்தாளாம் செப்பு செல சுப்பாயி
சூப்பெடுத்து குடிச்சுப்புட்டு சுர்ர்ன்னுதான் கொறட்டவிட்டு
ராப்பொழுது தூங்கிப்புட்டான் ரோஷம் கெட்ட புத்தி மவன்
கேட்டீங்களா இந்தக் கத காங்கேயம் காளைகளா
வாயிருந்தா சிரிப்பீங்க வேடிக்கை பாத்தீங்களா..

பெண் : சோறு ஏது தூக்கம் ஏது ஆறு மாசந்தான்
நான் வாங்கும் உள்மூச்சு உன்னாலே சூடாச்சு
ஆண் : வேரப் பாத்து நீர ஊத்த மேகம் வாராதா
தூறல்தான் போட்டாச்சு தோட்டந்தான் பூத்தாச்சு
பெண் : ஆத்தாடி அம்மாடி இந்த நேரம்
காத்தாட போவோமா ரொம்ப தூரம்

ஆண் : வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது
ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது
பெண் : பாவாட அணிஞ்ச நெலவு
நீரோட தேடும் படகு ஆத்தோரம் நடக்குது

தானான தனேனனா தானான தனேனனா
தானான தனேனனா தானான தனேனனா....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Thangamana Purushan

Keep listening

More from this movie

  1. Kathiyai Theettathae கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு

    Sung by SP. Balasubramaniam

  2. Kalyanam Kattatha Kanni கல்யாணம் கட்டாத கன்னிப் பொண்ணுங்க எல்லாருக்கும்

    Sung by SP. Balasubramaniam

  3. Kalyanam Kattatha Kanni கல்யாணம் கட்டாத கன்னிப் பொண்ணுங்க எல்லாருக்கும்

    Sung by Sankar (Ganesh)

  4. Thaaikulame Thaaikulame தாய்க்குலமே தாய்க்குலமே நல்ல சேதிதான் நம்ப

    Sung by Manorama

  5. Vaaikalu Varappula Rakkozhi வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது

    Sung by SP. Balasubramaniam, S. P. Shailaja