Pandiyanin Rajiyathil artwork

Song lyrics

Pandiyanin Rajiyathil

பாண்டியனின் ராஜ்ஜியத்தில்

23075 views

Singer · Chithra

Lyrics · Panchu Arunachalam

The lyrics

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தாய் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

***

ஆண் : நீ சிரிக்க நான் அணைக்க
பூ மணக்க தேன் கொடுக்க

பெண் : தேன் கொடுத்து நீ எடுக்க
நாள் முழுதும் நான் மயங்க

ஆண் : பார் கடல் போலேதான் நீயிருக்க
பாய்மரக் கலம் போலே நான் மிதக்க

பெண் : ராத்திரி தூங்காமல் நான் தவிக்க
ராஜனின் லீலைகள் நோய் தணிக்க

ஆண் : வெட்கம் தீர நான் உன்னைச் சேர
தொட்டு விளையாட ஆனந்தம் கூடாதோ

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா

ஆண் : கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

பெண்குழு : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

***

பெண் : மன்னவனுக்கும் மன்னவனே
என் மனதின் நாயகனே

ஆண் : என்னழகு கண்ணின் மணி
உன்னழகு பொன்னின் மணி

பெண் : வான் மழை மேகங்கள் நீர்த் தெளிக்க
வாடிய தேகங்கள் சேர்ந்திருக்க

ஆண் : வாலிப ராகங்கள் நான் படிக்க
நூலிடை தாளாமல் நீ துடிக்க

பெண் : சின்னப் பூவை
தேன் வெண்ணிலாவை
தொட்டு விளையாட
ஆனந்தம் கூடாதோ

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தேன் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
வேண்டி நின்ற பைங்கிளிக்கு உய்யலாலா
கையில் தந்தாய் கல்யாணமாலை
மையல் கொண்டேன் நான் இந்த வேளை

ஆண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா

பெண் : பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Paandiyan

Keep listening

More from this movie

  1. Pandiyanin Rajiyathil பாண்டியனின் ராஜ்ஜியத்தில்

    Sung by Chithra

  2. Pandiayana Kokka பாண்டியனா கொக்கா

    Sung by Mano

  3. Anbe Nee அன்பே நீ என்ன

    Sung by Mano, Chithra