Poo Meedhu artwork

Song lyrics

Poo Meedhu

பூ மீது யானை

9369 views

Singer · Malgudi Subha

Lyrics · Pugazhendhi

The lyrics

பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட ஏன் தான் காயமோ

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே
உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..
காதல் போலவே நோயும் இல்லையே
யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போல் அது வலி தருமோ.....
வேறு வேறாக நினைவு போகையில்
காதல் கொள்ளுதல் பாவம்
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்.

பூ மீது யானை பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Dishyum

Keep listening

More from this movie

  1. Bhoomiku பூமிக்கு வெளிச்சமெல்லாம்

    Sung by Gayathri, Vijay Antony

  2. Dailamo Dailamo டைலமோ டைலமோ

    Sung by Sangeetha Rajeshwaran, Vijay Antony

  3. Kitta Neringivaadi கிட்டே நெருங்கி வாடி

    Sung by Sukhwinder Singh, Gayathri

  4. Nenjangootil நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்

    Sung by Jayadev, Rajalakshmi

  5. Poo Meedhu பூ மீது யானை

    Sung by Malgudi Subha