Song lyrics
Putham Pudhiyadhu
புத்தம் புதியது முத்தம்
1884 views
Singer · K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics · Kamakodiyan
The lyrics
ஆண் : புத்தம் புதியது முத்தம் இனியது
பூவே இளம் பூவே
நித்தம் கனியது நெஞ்சம் உருகுது
பூவே இளம் பூவே
விழி பூக்கள் பூத்தது காதல்
இதன் வித்தைகள் எத்தனை நாவல்
இது வாலிப நூலகமாகும்
நாம் கற்றது கையளவு ஆகும்
பெண் : புத்தம் புதியது முத்தம் இனியது
பூவே இளம் பூவே
நித்தம் கனியது நெஞ்சம் உருகுது
பூவே இளம் பூவே
பெண் : விண்வெளியில் வெண்முகிலில்
சித்திரம் தீட்டீயது யாரோ
விந்தைகளில் தந்தை இது,
இதுதான் கடவுளின் ஊரோ
ஆண் : பொன்முகிலின் புன்னகையில்
என் மனதில் கார்காலம்
புல்வெளியில் மின்மினிகள்
கண் நிறையும் பனிக் கோலம்
பெண் : மாலை நேர சோலைகளை மேடை போடுங்கள்
மவுனம் கூட காதலரின் மேள தாளங்கள்
ஆண் : புத்தம் புதியது முத்தம் இனியது
பூவே இளம் பூவே
நித்தம் கனியது நெஞ்சம் உருகுது
பூவே இளம் பூவே
பெண் : விழி பூக்கள் பூத்தது காதல்
இதன் வித்தைகள் எத்தனை நாவல்
இது வாலிப நூலகமாகும்
நான் கற்றது கையளவு ஆகும்
ஆண் : புத்தம் புதியது முத்தம் இனியது
பூவே இளம் பூவே
நித்தம் கனியது நெஞ்சம் உருகுது
பூவே இளம் பூவே
ஆண் : புது நதியா மது நதியா
ஒளி நதியா உன் கண்கள்
இள நதியா வளர் நதியா
கிளை நதியா கன்னங்கள்
பெண் : கார்த்திகையா மார்கழியா
காற்றில் பனி நம்மை வாட்டும்
கை அணையும் மெய் அணையும்
காதல் சுகமது மூட்டும்
ஆண் : மோக முல்லை பாடுவதே ராக ராகங்கள்
முத்துமாலை ஆடுவதேன் ராஜ யோகங்கள்
பெண் : புத்தம் புதியது முத்தம் இனியது
பூவே இளம் பூவே
நித்தம் கனியது நெஞ்சம் உருகுது
பூவே இளம் பூவே.....
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Oru Pattam poochi ஒரு பட்டாம்பூச்சி
Sung by S. P. Sailaja
-
Gangai Nadhi Maraiyalam கங்கை நதி மறையலாம்
Sung by S. Janaki
-
Kuliradikkudhu Kuliradikkudhu குளிரடிக்குது குளிரடிக்குது
Sung by Malaysia Vasudevan, S. Janaki
-
Paattu Paada Vanthen பாட்டு பாட வந்தேன்
Sung by Vani Jayaram
-
Putham Pudhiyadhu புத்தம் புதியது முத்தம்
Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam
-
Rasi Porutham Undu ராசிப் பொருத்தம் உண்டு
Sung by Malaysia Vasudevan, S. P. Sailaja