Manathil Konda Aasaikalai artwork

Song lyrics

Manathil Konda Aasaikalai

மனதில் கொண்ட ஆசைகளை

3688 views

The lyrics

மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு


விதைப்பதெல்லாம்முளைப்பதில்லைமண்ணின்மீதிலே
முளைப்பதெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே
விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை மண்ணின் மீதிலே
முளைப்பதெல்லாம் விளைவதில்லை இந்த உலகிலே


மலர்வதெல்லாம் மணப்பதில்லை சோலை தன்னிலே
மலர்வதெல்லாம் மணப்பதில்லை சோலை தன்னிலே
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே
வளர்ந்த அன்பு நிலைப்பதில்லை பலரின் வாழ்விலே


மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு


ஒரு நிலா தான் உலவ முடியும் நீல வானிலே
உணர்ந்த பின்னே கலங்கலாமோ உள்ளம் வீணிலே
ஒரு நிலா தான் உலவ முடியும் நீல வானிலே
உணர்ந்த பின்னே கலங்கலாமோ உள்ளம் வீணிலே


உருகி உருகிக் கரைவதாலே பயனும் இல்லையே
உருகி உருகிக் கரைவதாலே பயனும் இல்லையே
ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே
ஓடிப் போன காலம் மீண்டும் வருவதில்லையே


மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
மனதில் கொண்ட ஆசைகளை மறந்து போய் விடு
இனிய காதல் நினைவே போதும் பிரிந்து போய் விடு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Madapura

Keep listening

More from this movie

  1. Kannirendum Thevaiyillai கண்ணிரண்டும் தேவை

  2. Manathil Konda Aasaikalai மனதில் கொண்ட ஆசைகளை

  3. Oorukkum Theriyathu ஊருக்கும் தெரியாது

  4. Sirikka Therinthal Pothume சிரிக்கத் தெரிந்தால் போதும்

  5. Varuvar Oru Naal வருவார் ஒரு நாள்