Sugam Tharum Nila artwork

Song lyrics

Sugam Tharum Nila

சுகம் தரும் நிலா என்னை

2166 views

Singer · K. S. Chithra, S. P. Balasubramaniam

Lyrics · Pulamaipithan

The lyrics

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : ஹாஹ் மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : இளமனம் துடிக்கிறதே
உனை எண்ணி தவிக்கிறதே
ஆண் : இருவரும் இரு துருவம்
இதில் எங்கு உறவு வரும்

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

ஆண் : மோகத்தை அழித்து விடு எனும்
பாட்டொன்று நான் இன்று கேட்டேன்
பெண் : ஆசைக்கு சிறகு கட்டி நான்
ஆகாயம் எங்கெங்கும் போனேன்

ஆண் : கண்டதோ மின்மினி
அது கையில் விளக்காகுமா
பெண் : வந்ததோ பெளர்ணமி
எந்தன் வானம் இருளாகுமா

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : கூட்டுக்குள் குயில் இருந்து தினம்
உன் காதல் ராகங்கள் பாடும்
ஆண் : வேட்டைக்கு வரும் வழியில் இந்த
ராகங்கள் யாருக்கு வேண்டும்

பெண் : உன்னைத்தான் எண்ணித்தான்
இந்த ஜீவன் துடிக்கின்றது
ஆண் : தன்னையே மறந்து
ஒரு வாழ்க்கை நடக்கின்றது

பெண் : சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
ஆண் : மணம் தரும் மலர் உன்னை
முள்ளின் கரம் அணைப்பது முறையல்ல

பெண் : இளமனம் துடிக்கிறதே
உனை எண்ணி தவிக்கிறதே
ஆண் : இருவரும் இரு துருவம்
இதில் எங்கு உறவு வரும்....

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Sattam Oru Vilaiyattu

Keep listening

More from this movie

  1. Oru Kulla Nari ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு

    Sung by S. N. Surendar, Shoba Chandrasekhar, K. J. Yesudas

  2. Oru Brindhavanam Engal ஒரு பிருந்தாவனம் எங்கள் வீடானது

    Sung by S. P. Balasubramaniam, Vani Jayaram

  3. Sugam Tharum Nila சுகம் தரும் நிலா என்னை

    Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam

  4. Nee Pirantha Pothu நீ பிறந்தபோது விளையாட

    Sung by Vidya