Kadhal Enbathu artwork

Song lyrics

Kadhal Enbathu

காதல் என்பது காவியமானால்

7612 views

Singer · K. J. Yesudas, P. Susheela

Lyrics · Vaali

The lyrics

காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்


சாகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு
சாகுந்தலம் என்ற காவியமோ
ஒரு தோகையின் வரலாறு
அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்
அந்தக் காவியம் கிடையாது
நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ
நாள் தோறும் படித்தது நினைவில்லையோ


காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்
அந்தக் கதா நாயகி உன்னருகே
இந்தக் கதா நாயகன் வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்


நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
நீலக்கடல் கொண்ட நித்திலமே
இந்த நாடகம் உனக்காக
உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்
இந்த நூலகம் எனக்காக
சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா
உனகந்த பொருள் கூறத் துடித்தேனம்மா


காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
வள்ளல் தரும் நல்ல நன் கொடை போல்
என்னை வாங்கிய மணிச்சரமே
இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்
வந்து பாய்ந்திடும் மழைச்சரமே
நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது
தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது


காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
காதல் என்பது காவியமானால் கதா நாயகி வேண்டும்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Naalai Namadhe

Keep listening

More from this movie

  1. Naalai Namathe நாளை நமதே

    Sung by S. P. Balasubramaniam

  2. Kadhal Enbathu காதல் என்பது காவியமானால்

    Sung by K. J. Yesudas, P. Susheela

  3. Naanoru Medai Paadagan நான் ஒரு மேடைப் பாடகன்

    Sung by L. R. Eswari, S. P. Balasubramaniam, T. M. Soundararajan

  4. Neela Nayanangalil நீலநயனங்களில் ஒரு நீண்ட

    Sung by K. J. Yesudas, P. Susheela

  5. Ennai Vittal என்னை விட்டால் யாருமில்லை

    Sung by K. J. Yesudas