Poopole artwork

Song lyrics

Poopole

பூ போலே உன் புன்னகையில்

10964 views

Singer · S. P. Balasubramaniam

The lyrics

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே 

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா


பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே ( இசை )

மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே எனை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே 

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா


அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி
அது தாய்மையை கொண்டாடுது ( இசை )

குக்கூ என்று வரும் சின்னக் குயில்
தன் குழந்தைக்கு சோறூட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீயின்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே 

பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா

பெத்த மனம் இன்று பித்தாகியே
ஒரு ேசாகத்தில் பண் பாடுது
பிள்ளை மனம் பெரும் கல்லாகியே
ஒரு ேகாபத்தில் நின்றாடுது
எண்ணங்கள் நூறு பின்னங்கள் நூறு
நெஞ்சுக்குள் ஓட நான் வாழ்கின்றேன்
வா மகளே என்னைப் பார் மகளே
என் உயிரின் ஔி நீயே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kavari Maan

Keep listening

More from this movie

  1. Angel I see only you ஏஞ்சல் ஐ ஸி ஒன்லி யூ

  2. Brova Bharama ப்ரோவ பாரம

  3. Poopole பூ போலே உன் புன்னகையில்

    Sung by S. P. Balasubramaniam

  4. Solla vallaayo kiliyae சொல்ல வல்லாயோ கிளியே

    Sung by S. Janaki