Unavu Sellavillai Sagiye artwork

Song lyrics

Unavu Sellavillai Sagiye

உணவு செல்லவில்லை சகியே

1449 views

Singer · Mano

Lyrics · Mahakavi Bharathiyar

The lyrics

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை

மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை
மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை....

பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி
பாலும் கசந்தடி சகியே படுக்கை நொந்ததடி
கோலக் கிளிமொழியும் செவியில்
குத்தலெடுத்ததடி
கோலக் கிளிமொழியும் செவியில்
குத்தலெடுத்ததடி

நாலு வயித்தியரும் இனிமேல்
நம்புதற்கில்லை என்றார்
பாலத்துச் சோசியனும் கிரகம்
படுத்தும் என்று விட்டான்..

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை

கனவு கண்டதிலே ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்
கனவு கண்டதிலே ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்

இனம் விளங்கவில்லை எவனோ
என் அகம் தொட்டு விட்டான்.
இனம் விளங்கவில்லை எவனோ
என் அகம் தொட்டு விட்டான்

வினவக் கண் விழித்தேன் சகியே
மேனி மறைந்து விட்டான்
மனதில் மட்டிலுமே புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடி.....

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை

மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை
மணம் விரும்பவில்லை சகியே
மலர் பிடிக்க வில்லை

உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை....
உணவு செல்லவில்லை சகியே
உறக்கம் கொள்ளவில்லை.....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Samsarame Saranam

Keep listening

More from this movie

  1. Andakakasam Abukakasam அண்டா காகசம் அபு

    Sung by Mano, Gangai Amaran

  2. Unavu Sellavillai Sagiye உணவு செல்லவில்லை சகியே

    Sung by Mano

  3. Unavu Sellavillai Sagiye உணவு செல்லவில்லை சகியே

    Sung by K. S. Chitra

  4. Kattilin Mele Irukkudhu கட்டிலின் மேலே இருக்குது

    Sung by K. Veeramani

  5. Thookkamilla Thookkamilla ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிரோ

    Sung by Gangai Amaran