Maaname Pradhaanam artwork

Song lyrics

Maaname Pradhaanam

மானமே பிரதானம்

1963 views

Singer · T. M. Soundararajan

Lyrics · A. Maruthakasi

The lyrics

மானமே பிரதானம் இதை நாம்
மதித்து வாழ வேண்டும்
தன் மானமே பிரதானம்
வாழ் வரினும் தாழ்வு வரினும்
வையகத்தில் மாசில்லாத.....(மானமே)

மாடும் கன்றும் இருந்தாலும்
மக்கள் சுற்றும் நிறைந்தாலும்
கோடி செல்வம் குவிந்தாலும்
பட்டம் பதவியில் சிறந்தாலும்
இருந்தும் இல்லாதவரே – மானம்
இழந்த பேர்கள் பதரே – அதனால் (மானமே)

செல்வம் என்றும் நில்லாது – அது
திரும்பப் பலநாள் செல்லாது
சென்ற மானம் திரும்பாது – கண்கண்ட
உண்மை இது தவறாது......(மானமே)

மானம் இழந்தால் அவமானம்
மனிதன் காணும் வெகுமானம் – இதை
மனதில் கொண்டு நிமிர்ந்து நின்று
புகழைத் தேட வேணும் – உலகில்...(மானமே)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Deivame Thunai

Keep listening

More from this movie

  1. Chinnakutti Nadaiyai Paaru சின்னக் குட்டி நடையப் பாரு

    Sung by P. Leela

  2. Sonnaal Thaan Theriyumaa சொன்னால்தான் தெரியுமோ

    Sung by P. Leela

  3. Mana malare Kani rasame மண மலரே கனிரசமே

    Sung by P. Susheela

  4. Malaraadha Malarellaam மலராத மலரெல்லாம்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  5. Maaname Pradhaanam மானமே பிரதானம்

    Sung by T. M. Soundararajan

  6. Jegatheeswariye ஜெகதீஸ்வரியே

    Sung by P. Susheela

  7. O Raja Ennai Paaru ராஜா என்னைப் பாரு

    Sung by A. L. Raghavan, S. Janaki