Malarnthum malaradha

Song lyrics

Malarnthum malaradha

மலர்ந்தும் மலராத

69185 views

Singer · P. Susheela, T. M. Soundararajan

Lyrics · Kannadasan

The lyrics

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

யானை படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா

தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்
பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா

ம்ம்… அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Paasamalar

Keep listening

More from this movie

  1. Malarnthum malaradha மலர்ந்தும் மலராத

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  2. Mayangugiraal Oru Mathu மயங்குகிறாள் ஒரு மாது

    Sung by P. Susheela

  3. Engalukkum Kaalam எங்களுக்கும் காலம்

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  4. Paatondru Ketten பாட்டொன்று கேட்டேன்

    Sung by Jamuna Rani

  5. Vaarayen Thozhi வாராய் என் தோழி

    Sung by L. R. Eswari

  6. Yaar Yaar Avar யார் யார் யார்

    Sung by P. B. Srinivas, P. Susheela

  7. Malargalai Pool மலர்களைப் போல்

    Sung by T. M. Soundararajan