Kurukku Chiruththavale artwork

Song lyrics

Kurukku Chiruththavale

குருக்கு சிறுத்தவளே

253520 views

Singer · Hariharan, Mahalakshmi Iyer

Lyrics · Vairamuthu

The lyrics

குறுக்கு சிறுத்தவளே - என்னக் குங்குமத்தில் கரைச்சவளே - நெஞ்சில்
மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம்
பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம்
மாத்து தாயே

குறுக்கு சிறுத்தவளே - என்னக் குங்குமத்தில் கரைச்சவளே - நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம்
பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம்
மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசிர் கசிய - ஒன்னால
சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே...
அட ஆத்தோட விழுந்த எல
அந்த ஆத்தோட போவது போல் - நெஞ்சு ஒன்னோடுதான்
பின்னோடுதே
அட காலம் மறந்து
காட்டு மரமும்
பூக்கிறதே

குறுக்கு சிறுத்தவளே - என்னக் குங்குமத்தில் கரைச்சவளே - நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம்
பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம்
மாத்து தாயே

கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறியே

கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே
ஒரு மொழி சிரிச்சு பேசறியே

வாயி மேல வாய வெச்சு
வார்த்தைகள உறிஞ்சிப்புட்ட
வெரல வெச்சி அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல...

அடி ஒம்போல செவப்பு இல்ல கணுக்கால் கூட கருப்பு இல்ல - நீ
தீண்டும் இடம்
தித்திக்குமே - இனி
பாக்கி ஒடம்பும்
செய்ய வேண்டும்
பாக்கியமே

குறுக்கு சிறுத்தவளே - என்னக் குங்குமத்தில் கரைச்சவளே - நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம்
பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம்
மாத்து தாயே

ஒரு தடவ
இழுத்து அணச்சபடி
உயிர் மூச்ச
நிறுத்து கண்மணியே

ஒம்முதுக
தொளச்சி வெளியேற
இன்னும் கொஞ்சம்
இருக்கு என்னவனே

மழையடிக்கும் சிறு பேச்சு
வெயிலடிக்கும் ஒரு பார்வ
ஒடம்பு மண்ணில்
புதையற வரையில்
உடன் வரக்
கூடுமோ

உசிர் என்னோட இருக்கையில - நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சேவையில் நானில்லையா கொல்ல வந்த
மரணம் கூடக்
குழம்புமய்யா

குறுக்கு சிறுத்தவளே - என்னக் குங்குமத்தில் கரைச்சவளே - நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம்
பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம்
மாத்து தாயே

ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசிர் கசிய
ஒன்னால
சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும் ஆனதே
அட ஆத்தோட விழுந்த எல
அந்த ஆத்தோட போவது போல் - நெஞ்சு
ஒன்னோடுதான்
பின்னோடுதே
அட காலம் மறந்து
காட்டு மரமும்
பூக்கிறதே

குறுக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரைச்சவளே - நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
என்னக் கொஞ்சம்...
பூசுவேன்யா
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம்
கொஞ்சம்...
மாத்துவேன்யா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mudhalvan

Keep listening

More from this movie

  1. Azhagana Ratchashiyae அழகான ராட்சசியே

    Sung by G. V. Prakash Kumar, Harini, S. P. Balasubramaniam

  2. Kurukku Chiruththavale குருக்கு சிறுத்தவளே

    Sung by Hariharan, Mahalakshmi Iyer

  3. Mudhalvanae முதல்வனே வனே

    Sung by S. Janaki, Shankar Mahadevan

  4. Shakalaka Baby ஷகலக பேபி ஷகலக பேபி

    Sung by Pravin Mani, Vasundhara Das

  5. Ulundhu Vithakkaiyilae உளுந்து வெதக்கையிலே

    Sung by Srinivas, Swarnalatha

  6. Uppu Karuvadu உப்புக் கருவாடு

    Sung by Shankar Mahadevan, Kavita Krishnamurthy