Song lyrics
Veyilodu Vilaiyadi
வெயிலோடு விளையாடி
73318 views
Singer · Jassie Gift, Kailash Kher, Tippu, Prasanna
Lyrics · Na. Muthukumar
The lyrics
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே
பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை புழுதி தான் நம்ம சட்டை
புழுதி தான் நம்ம சட்டை
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்
அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்
பொட்டல் காட்டில் பொழுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன் வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்
ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்
தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம்

புழுதி தான் நம்ம சட்டை புழுதி தான் நம்ம சட்டை

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Ooran Thotathhilae ஊரான் தோட்டத்துல
Sung by Jassie Gift, Tippu
-
Kaatraka kadhal காற்றாகக் காதல்
-
Aruvaa Mimuminumga அருவா மினுமினுங்கா
-
Iraivanai இறைவனை உணர்கிற
Sung by Prashanthini
-
Chetavadam செத்தவடம்
Sung by Manickka Vinayagam
-
Veyilodu Vilaiyadi வெயிலோடு விளையாடி
Sung by Jassie Gift, Kailash Kher, Tippu, Prasanna
-
Kaadhal Neruppin காதல் நெருப்பின்
Sung by Chinmayi, Karthik