Indha Naal Nalla Naale artwork

Song lyrics

Indha Naal Nalla Naale

இந்த நாள் நல்ல

2062 views

Singer · S. P. Balasubramaniam, Vidya

Lyrics · S. Malarmaran

The lyrics

பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே
என் மனதினில் என்றும் உன் நினைவுகளே

பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா

ஆண் : இளமை துடிப்பில் வந்து
ஏக்கம் பிறக்குது இதழில் கவிதை எழுது
பெண் : தனிமை நெருப்பில் இந்த
தேகம் கொதிக்குது தழுவ துடிக்கும் வயது

ஆண் : ரோஜா மலர்களில் பனித்துளி என வந்து
நானும் விழுந்திடவா
பெண் : ராஜா மடியினில் விடிகிற வரையினில்
நானும் உறங்கிடவா

ஆண் : மயக்கும் பூங்கொடி தயக்கம் ஏனடி
பெண் : மஞ்சம் அழைக்குது நெஞ்சம் தவிக்குது
ஆண் : மஞ்சம் அழைக்குது நெஞ்சம் தவிக்குது
தினம் ஒரு கவி படிப்போம்

பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே
என் மனதினில் என்றும் உன் நினைவுகளே

ஆண் : அழகு குலுங்க வரும் அன்னக்கொடி உன்னை
ரசிக்கும் எனது மனது
பெண் : உனது விழிகள் சொல்லும் மோகக் கதைகளை
அறியும் எனது மனது

ஆண் : ஏதோ நினைவினில் புதுவகை கனவினில்
இதயம் மகிழ்ந்திருக்கு
பெண் : காதல் அரசி அருகினில் இருக்கையில்
வேறோர் நினைவெதுக்கு

ஆண் : அழகின் சிரிப்பிலே ஆசை வளருது
பெண் : கண்கள் சிவக்குது உள்ளம் துடிக்குது
ஆண் : கண்கள் சிவக்குது உள்ளம் துடிக்குது
புது கதை தொடரட்டுமே

பெண் : இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
ஆண் : என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே
என் மனதினில் என்றும் உன் நினைவுகளே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vetri Mel Vetri

Keep listening

More from this movie

  1. Indha Naal Nalla Naale இந்த நாள் நல்ல

    Sung by S. P. Balasubramaniam, Vidya

  2. En Nenjile Vandhathae என் நெஞ்சிலே வந்ததே

    Sung by Mano, S. Janaki

  3. Kannana Kanmaniye கண்ணான கண்மணியே

    Sung by K. J. Jesudass, K. S. Chitra

  4. Mallinna Mallithan Manamadura மல்லின்னா மல்லிதான் மானாமதுர

    Sung by S. P. Balasubramaniam

  5. Hare Isthanbul Naattilae ஹரே இஸ்தான்புல் நாட்டிலே

    Sung by Gangai Amaran