Endhan Kaik Kuttaiyai artwork

Song lyrics

Endhan Kaik Kuttaiyai

எந்தன் கைக் குட்டையை

3836 views

The lyrics

எந்தன் கைக் குட்டையை யார் எடுத்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக் குட்டையை யார் எடுத்தது
எந்தன் கைக் குட்டையை யார் எடுத்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக் குட்டையை யார் எடுத்தது
நீயா...நீயா ...நீயா ...நீயா


ஆ..ஹா ஆ..ஹா..ஆ..ஹா
ஆ..ஹா ஆ..ஹா..ஆ..ஹா
சின்ன சின்ன நூல்களில்
பூக்கள் வரைந்தேன்
ஆ..ஹா என்னை வைத்து
நான் அதில் பின்னியிருந்தேன்

கைக்குட்டையில் சின்னம் 
ஒன்று கண்டுப் பிடித்தேன்
பின்னி வைத்த பூவுக்கு
முத்தம் கொடுத்தேன்

காதல் இதயம் தந்து முடித்தேன்
கண்ணின் இமையால் தந்தி அடித்தேன்

பின்னி முடித்த நூல்களுக்குள்
நான் சிக்கி தவித்தேன்
சிக்கித் தவித்தேன்
சிக்கல் எடுத்தேன்
எந்தன் கைக் குட்டையை யார் எடுத்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
அன்புக் காதலின் சின்னமாய்
எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக் குட்டையை யார் எடுத்தது
நீயா...நீயா ...நீயா ...நீயா 


கைக்குட்டையில் வேர்வையை
துடைத்ததில்லை அதற்கு 
வலித்திடுமென்று
நான் மடித்ததில்லை

உந்தன் கையில் தந்தது
துணியுமில்லை என்
இதயத்தைத் தான் 
தந்தேன் வலியுமில்லை

உன்னை நினைத்தால் உறக்கமில்லை
இன்பக்கிளியே இரக்கமில்லை

வாய் திறந்து என் பெண்மை சொல்வது
வழக்கமில்லை பழக்கமில்லை விளக்கமில்லை
அந்தக் கைகுட்டையை யார் எடுத்தது
அன்புக்காதலின் சின்னமாய்
இந்தக் காதலே தந்தது
அன்புக்காதலின் சின்னமாய்
இந்தக் காதலே தந்தது
அந்தக் கைகுட்டையை யார் எடுத்தது
நான்தான்...நான்தான்...
நான்தான்...நான்தான்...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Isai Paadum Thendral

Keep listening

More from this movie

  1. Endhan Kaik Kuttaiyai எந்தன் கைக் குட்டையை

  2. Vaazhaimaram Katti வாழைமரம் கட்டி