En Kaadhal Theeye artwork

Song lyrics

En Kaadhal Theeye

என் காதல் தீ

30169 views

Singer · S. P. Balasubramaniam

Lyrics · Vairamuthu

The lyrics

ஆ: என் காதல் தீ...
தீ வாசம் நீ...
கண் பார்த்தோம் வா...
கை சேர்ப்போம் வா...

பல உயிர்கள் ஏறியும்
உடல்கள் மாறியும்
பயணப்படுவது காதல்

காதல் சாதல்
காதல் சாதல் ரெண்டும் ஒன்று
என்னே விந்தையடி

அந்த சொர்கம் போக
ரெண்டும் வேண்டும்
கண்ணே உண்மையடி

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி

என் காதல் தீ...
தீ வாசம் நீ...
கண் பார்த்தோம் வா...
கை சேர்ப்போம் வா...

உடல்கள் இரண்டும் சேரும் முன்
உள்ளம் இரண்டும் சேருமே

உடலின் வழியே
உயிரை தொடுவது காதலே

இதயம் இரண்டு்ம் தூரம் தான்
இதழ்கள் நான்கும் அருகில் தான்

இதழ்கள் வழியே
இதயம் தொடுவது காதலே

ஊசி போடும் ரெண்டு கண்களில் உயிரை குடித்தவள் நீ

உயரம் காட்டும் பூக்கள் இரண்டினில் உலகை உடைப்பவள் நீ

காதல் சாதல் ரெண்டும் ஒன்று
என்னே விந்தையடி

அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி

குழு: காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி
அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி

ஆ: உலகில் காதல் பழையது
உற்ற பொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது
உலகின் நெருப்பு காதலே
உயிரில் இருப்பு காதலே
உண்மை காதல் உலகை விடவும் பெரியதே
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குழுங்கும் பூ விதுவே...
பாலை வெயிலிலும் காணல் வெளியிலும் படரும் நிழிலிதுவே...

குழு: கண்டார் மயங்கும் வண்டார் மலரே
நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது
என்ன செழுமையடி

ஆ, குழு: பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது
என்ன செழுமையடி

ஆ: அதை மொத்தம் எடுக்க சித்தம் துடிக்குதடி

பெண் பாவாய் வா...
கண் பாவாய் வா...
செங்கோலாய் வா...
சென் தேனாய் வா...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Irandaam Ulagam

Keep listening

More from this movie

  1. En Kaadhal Theeye என் காதல் தீ

    Sung by S. P. Balasubramaniam

  2. Vinnathaandi Anbe விண்ணை தாண்டி

    Sung by Vijay Prakash

  3. Pazhangkalla பழங்கள்ளா விஷ

    Sung by Dhanush

  4. Kanimozhiye Ennai கனிமொழியே என்னை

    Sung by Karthik

  5. Raakkozhi Raakhozhi ராக்கோழி ராக்கோழி

    Sung by Hariharan, Palghat Sriram

  6. Mannavane En மன்னவனே என்

    Sung by Gopal Rao, Shakthisree Gopalan

  7. Iravinil Oruvanai இரவினில் ஒருவனை