Ketti Melam Kotta Venum Song Lyrics

கெட்டி மேளம் கொட்ட பாடல் வரிகள்

Melam Kottu Thali Kattu (1988)
Movie Name
Melam Kottu Thali Kattu (1988) (மேளம் கொட்டு தாலி கட்டு)
Music
Premasiri Kemadasa
Singers
S. P. Balasubramaniam, K. S. Chitra
Lyrics
Vaali
ஆண் : கெட்டி மேளம் கொட்ட வேணும்
மஞ்சத் தாலிக் கட்ட வேணும்
இப்ப நல்லாருக்கு நேரம்
ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி
பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்

பெண் : கெட்டி மேளம் கொட்ட வேணும்
மஞ்சத் தாலிக் கட்ட வேணும்
இப்ப நல்லாருக்கு நேரம்
ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி
பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்

பெண் : அணைக்க அணைக்க மணக்கும்
இந்த ஆவாரம்பூ மேனி
வயசுப் பொண்ண பாத்து வல விரிச்சதென்ன நேத்து
ஆண் : வயலில் ஆடும் நாத்து அத
வளைச்சுப் போடும் காத்து

பெண் : எதுக்கு இத்தன தவிப்பு எடுத்து கொஞ்சற நெனப்பு
ஆண் : தனிச்சு நிக்கிற எடந்தான் தழுவிக் கொள்ளடி சுகந்தான்
பெண் : உனக்கு நானும் எனக்கு நீயும் தகுந்த பொருத்தம் தான்

ஆண் : கெட்டி மேளம் கொட்ட வேணும்
மஞ்சத் தாலிக் கட்ட வேணும்

ஆண் : வளையல் குலுங்கும் ஓசை
புது சங்கீதம் போல் கேட்க
பெண் : ஆஆஆ...விழியில் வழியும் ஆசை
ஒரு வெள்ளோட்டம் தான் பார்க்க

ஆண் : மனசுக்கேத்த ஆளு உன் மடியில் சேரும் நாளு
பெண் : நெனச்சதென்ன கேளு இப்ப நெருங்கியாச்சு தோளு
ஆண் : கனிஞ்சு வந்தது பழம்தான் கடிக்க வந்தது அணில்தான்
பெண் : விரும்பி வந்தது உன்னத்தான் வாழ வைக்கணும் என்னத்தான்
ஆண் : அடி பிறவி ஏழும் தொடர்ந்து வாழும் பாச பந்தம்தான்

பெண் : கெட்டி மேளம் கொட்ட வேணும்
மஞ்சத் தாலிக் கட்ட வேணும்
இப்ப நல்லாருக்கு நேரம்
ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி
பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்