Pathinettu Vajathu Song Lyrics

பதினெட்டு வயது பாடல் வரிகள்

Suriyan (1992)
Movie Name
Suriyan (1992) (சூரியன்)
Music
Deva
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyrics
Vaali
பெண் : பதினெட்டு வயது இளமொட்டு
மனது ஏங்குது பாய் போட
பனி கொட்டும் இரவு..
பால் வண்ண நிலவு
ஏங்குது உறவாட
கங்கை போலே காவிரி போலே
ஆசைகள் ஊறாதா
சின்னப் பொண்ணு.. செவ்வரி கண்ணு
ஜாடையில் கூறாதா
பதினெட்டு வயது இளமொட்டு
மனது ஏங்குது பாய் போட (இசை)

பெண்குழு : தகதிமி தம்தம்.. தம் தம் தகதிமி தம்தம்..
தகதிமி தம்தம்.. தம் தம் தகதிமி தம்தம்..

***

ஆண் : மாணிக்கத் தேரு.. மணிமுத்து ஆறு
மாணிக்கத் தேரு.. மணிமுத்து ஆறு
போதும்.. போதும்.. நீ ஒதுங்கு

பெண் : ம்ஹும்

ஆண் : அந்தப் பாயைப் போட்டுத்தான் உறங்கு

பெண் : நான் விட மாட்டேன்
தூண்டிலைப் போட்டேன்
காலந்தோறும் நீ எனக்கு

ஆண் : ஹைய்யோ

பெண் : இது கால தேவனின் கணக்கு

ஆண் : கூசுது உடம்பு.. குலுங்குது நரம்பு
நீ என்னை உரசாதே.. ஹோ..

பெண் : ஆஹ்.. கூச்சங்கள் எதுக்கு
ஆண்மகன் உனக்கு
நீ என்னை விலகாதே
ராத்திரி.. நமக்கு முதல் ராத்திரி
பால் பழம் கொண்ட பாத்திரம்
பக்கம் நெருங்கிட.. விருந்திட.. ஆசை விடுமா

பெண்குழு : சும்மா நின்னா மாமனைக் கண்டு
தலையணை சிரிக்காதா
சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா
தாமரை வெடிக்காதா

பெண் : ஆ.. ஹா...ஆஆ...ஆ.. ஆஹா..

இருவர் : ஆ..ஹா..

***

பெண் : மாங்கனிச் சாறும்.. செவ்விள நீரும்
மாங்கனிச் சாறும் செவ்விள நீரும்
மேலும் கீழும் தான் இனிக்க
அதை மீண்டும் மீண்டும் நீ எடுக்க

ஆண் : மூக்குத்திப் பூவே.. மோக நிலாவே
தேனை வாரி நீ தெளிக்க
அதில் தாகம் தீர நான் குளிக்க

பெண் : மன்மத பாணம் பாயுற நேரம்
வீரத்தை நிலை நாட்டு.. ஹோ..

ஆண் : ஹஹ்ஹ.. மாலையில் தொடங்கி
காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு
பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்
தீண்டினாள்.. எனைத் தூண்டினாள்
அவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன்

பெண்குழு : மஞ்சத் தாலி முடிஞ்ச பின்னாலே
மாப்பிள்ளை நீயாச்சு
வெட்கம்.. அச்சம்.. இவைகளுக்கின்று
விடுமுறை நாளாச்சு

பெண் : பதினெட்டு வயது இளமொட்டு மனது
ஏங்குது பாய் போட

ஆண் : ம்..

பெண் : பனி கொட்டும் இரவு.. பால் வண்ண நிலவு
ஏங்குது உறவாட