Vellimani Thottil Katta Song Lyrics

வெள்ளி மணி தொட்டில் கட்ட பாடல் வரிகள்

Thalaimurai (1998)
Movie Name
Thalaimurai (1998) (தலைமுறை)
Music
Ilaiyaraaja
Singers
Arun Mozhi, Ilaiyaraaja, Sujatha Mohan
Lyrics

ஏ கண்ணம்மா பொன்னம்மா
அடி தேவான சீனியம்மா முத்தம்மா சக்கம்மா
இங்கு எல்லோரும் சேந்து ஒண்ணா வாங்கடி
நல்ல சேதியும் சொல்லுறேன் கேளு

சின்னம்மா வீட்டுக்கு ஒரு வாரிசு வளருதடி
கூடிக் கொலவை இட்டுப் பாடடி
அட ஊரெல்லாம் பந்தலப் போடு
மாவிலத் தோரணம் கட்டு
கும்மியும் கொட்டடி கொட்டடி

வெள்ளி மணி தொட்டில் கட்ட
வேள ஒண்ணு வந்ததிப்போ கொண்டாடடி
இதக் கொண்டாடடி
பட்டம் கட்ட புள்ள ஒண்ணு
பாண்டியர்க்கு வந்ததின்னு பூப் போடடி
அம்மனுக்கொரு பூப் போடடி

அம்மாடி தங்கக் கட்டி
தொட்டியக் கட்டி தாலாட்டு நான் பாடணும்
இல்லாத சீர் சீதனம்
வண்டியக் கட்டிக் கொண்டாடி ஊர் சேரணும்
மானுக்குள்ள மானா சிங்கக் குட்டிதானா
சொல்லடி அம்மா இப்போதே...(வெள்ளி மணி)

அம்மனுக்குப் பொங்க வைக்க
அச்சு வெல்லம் பச்சரிசி
எடுத்து நான் தரட்டுமா கனக மணியே
முத்து மணிப் புள்ள ஒண்ணு
முத்தாளம்மன் தருவாளுன்னு
கழுத்தில் நான் முடிக்கவா கழுக மணியே

மீனாட்சி அம்மனுக்கும் மேல்மாடச் சொக்கனுக்கும்
கல்யாணத்தக் கண்ணாரப் பாப்போமா
தென் பாண்டி மன்னனையும் திருநாச்சி அம்மனையும்
தேரில் வெச்சு ஊர்கோலம் வருவோமா
எட்டுப் புள்ள பெத்தவளே தொட்டில் ஆட்ட கிட்ட வந்து
மச்சானுக்குக் கத்துக் கொடடி.........(வெள்ளி மணி)

மாங்கா ருசிக்கும் இந்த நேரம்
மனசு நித்தம் கரம்ப மண்ணத் தேடும்
சாம்பலு போதுமா இன்னமும் வேணுமா
எப்பவும் தூக்கமா எந்திரி பாப்பமா

ஏ... கொல்லைக்கொரு தென்னம் பிள்ள
வீட்டுக்கொரு சுட்டிப் புள்ள
இல்லையின்னா வீடுகதான் வீடும் இல்லையே

பெத்தவங்க பேரச் சொல்ல
கேட்டுக்கணும் நல்ல சொல்ல
இல்லையின்னா புள்ளைக தான்
புள்ளையும் இல்லையே

அது போல புள்ள ஒண்ணு அழகாக பெத்துப் போடு
ஊரு சனம் நம்மோட புகழ் பேச
அறிவான புள்ள வந்தா அதனால பேரும் வந்தா
சந்தோஷமா கொண்டாட எனக்காச
பொன்மகளே பூமகளே மெல்ல மெல்ல எட்டு வையி
பிஞ்சு மகள் தவிப்பாளே.........(வெள்ளி மணி)