Sangathamizho Thangachimizho Song Lyrics

சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ பாடல் வரிகள்

Vizhiyora Kavithai (1988)
Movie Name
Vizhiyora Kavithai (1988) (விழியோர கவிதை)
Music
Shankar-Ganesh
Singers
P. Jayachandran
Lyrics
Vaali
பெண் : ஆஆஆ.....ஆஆஆஆ....

ஆண் : சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ
செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ
பால் பொங்கும் பூந்தேகம்
மேலாடையும் கீழாடையும் மூட
காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ

சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ
செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ

ஆண் : உன் கார்க்கூந்தல் நீர்க் கொண்ட மேகம்
உன் கண் வண்ணம் செம்மீன்கள் ஆகும்
நீ செவ்வாழைக் கால் கொண்டு ஆட
என் சிந்தை உன் பின்னோடு ஓட

இள நெஞ்சை வலை வீசி பிடித்தாயோ..ஆஆஆ..
விழியோரக் கவிதை நீ படித்தாயோ...ஆஆஆ...
ஆகாயம் நானாக பூபாளம் நீதானோ

சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ
செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ
பால் பொங்கும் பூந்தேகம்
மேலாடையும் கீழாடையும் மூட
காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ

சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ
செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ....

நீ தெய்வீக எழில் கொஞ்சும் மாது
விண் திரை மீது நீ தோன்றும்போது
நான் பாராட்ட மொழி ஒன்று ஏது
என் பார்வைகள் சொல்லாதோ தூது

எதிர் நின்று சதிராடும் மலர்த்தோட்டம்..ஆஆஆ..
இடை மீது குலுங்காதோ கனிக் கூட்டம்...ஆஆஆ..
நீதானே நாள்தோறும் நான் பாடும் ஸ்ரீராகம்

சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ
செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ
பால் பொங்கும் பூந்தேகம்
மேலாடையும் கீழாடையும் மூட
காணாததை நான் கண்டதும் தேனாக இனித்ததோ

சங்கத் தமிழோ தங்கச் சிமிழோ
செந்தேன் மழை நாளும் தரும் செந்தாமரையோ....