Desiyageetham Song Lyrics

தேசியகீதம் பாடல் வரிகள்

Desiya Geetham (1998)
Movie Name
Desiya Geetham (1998) (தேசிய கீதம் )
Music
Ilaiyaraaja
Singers
K. J. Yesudas
Lyrics
ஓம் பாரத மாதா ஜனனி வந்தே மாதரம்
ஓம் பாரத மாதா ஜனனி வந்தே மாதரம்

 ஏங்கிடும் வேளையில் கூக்குரல் தான் இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும் பேதமும் தான் இங்கு சுதந்திர பாடமடா
காந்தியின் கைத்தடி ஆயுத சந்தையில் போட்டது யார்
அழுகுரல் ஓசையை மேடையின் குரல்களில் மறைத்தது யார்
சுதந்திரமே சோதனையா வேதனையா

 கண்ணீரும் பலர் செந்நீரும் விடுதலை வாங்கிய தேசம்
வம்பாலும் வெடிகுன்டாலும் ஆனது ஆனது நாசம்
சாதிகளால் மோதல்களால் நூறாய் சிதறுவதோ
கவலைகளின் கருவறையில் இனியும் உறங்குவதோ
மதமெனும் பேய்களின் நீதி
உயிர் துடிக்குது உங்களின் நீதி
சத்தியம் பிழைத்திட சத்திய சோதனை நடக்குதோ
 வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
 ஏங்கிடும் வேளையில் கூக்குரல் தான் இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும் பேதமும் தான் இங்கு சுதந்திர பாடமடா
காந்தியின் கைத்தடி ஆயுத சந்தையில் போட்டது யார்
அழுகுரல் ஓசையை மேடையின் குரல்களில் மறைத்தது யார்
சுதந்திரமே சோதனையா வேதனையா
ஏங்கிடும் வேளையில் கூக்குரல் தான் இங்கு தேசிய கீதமடா
தினம் ஒரு கலகமும் பேதமும் தான் இங்கு சுதந்திர பாடமடா

 தேர்தலினால் பல கட்சிகளால் தேவைகள் தீர்ந்திடவில்லை
தோல்விகளால் அதன் வேதனையால் தலைவர்கள் திருந்திடவில்லை
வென்றவனோ ஊழலெனும் ஊஞ்சலில் ஆடுகிறான்
வாக்குகளை போட்டவனோ வறுமையில் வாடுகிறான்
என்றைக்கு இந்நிலை மாறும்
இலையுதிர் காலங்கள் ஓடும்
பசி கொண்ட பூமியில் பசுமையின் புரட்சிகள் நடக்குதோ