Kamban Engu Song Lyrics

கம்பன் எங்கு பாடல் வரிகள்

Jadhi Malli (1993)
Movie Name
Jadhi Malli (1993) (ஜாதி மல்லி)
Music
Maragadha Mani
Singers
K. S. Chithra, S. P. Balasubramaniam
Lyrics
Vairamuthu
ஆண் : ஆ ஹா..ஆ ஹா.. ஆஹா..(மூச்சு வாங்குதல்)
கம்பன் எங்கு போனான்
ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

பெண் : லைலா செத்துப் போனாள்
மஜ்னு செத்துப் போனான்
நம்மை பாராமல்

ஆண் : கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்

பெண் : கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்

ஆண் : இது ஒரு புது முறை
இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை
வணங்கட்டும் இருவரை
கம்பன் எங்கு போனான்
ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்
கம்பன் எங்கு போனான்
ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

***

பெண் : இது கையில் கட்டிய தாலி
பலர் கழுத்தில் உள்ளது போலி
இந்த குறுகிய வட்டம் இனி சரி வருமா
உங்கள் கோட்டுக்குள் மழை பெய்யுமா

ஆண் : அணை விட்டு தாவிய வெள்ளம்
இது கட்டுக் காவலை வெல்லும்
உங்கள் விதிகளும் சதிகளும் நிரந்தரமா
இது விலங்கிட்ட சுதந்திரமா

பெண் : எங்கள் பேரை யாரும் கேட்டால்
பிர்..ர்ர்ர்ர்ர்ர் என்போம்

ஆண் : எங்களுக்குள்ளே என்ன உறவென்றால்
பிர்..ர்ர்ர்ர்ர்ர் என்போம்

பெண் : விலங்குகள் தடை இல்லை
விதிகளும் தடை இல்லை
மரபுகள் தடை இல்லை
மனிதரும் தடை இல்லை
கம்பன் எங்கு போனான்
ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

ஆண் : கம்பன் எங்கு போனான்
ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

***

ஆண் : இது யுத்தம் இளமை யுத்தம்
இனி துச்சம் உறவுகள் துச்சம்
உங்கள் கட்டு திட்டம் சட்ட திட்டம்
தள்ளி வையுங்கள்
இல்லை கடலுக்குள் தள்ளி விடுங்கள்

பெண் : அட புத்தம் புதியது சொந்தம்
இது முத்தம் எழுதிய பந்தம்
இனி இளையவர் எங்களுக்கு குரல் கொடுங்கள்
அட பழையவர் வழி விடுங்கள்

ஆண் : காதலை தடுத்தவர் கதை என்ன ஆனாது
பிர்....ர்ர்ர்ர்ர் தானே

பெண் : கை கொண்ட விலங்கும் நாங்கள் நினைத்தால் பிர்...ர்ர்ர்ர்ர் தானே

ஆண் : நினைப்பது நடக்கணும் இது எங்கள் இலக்கணம்
இனி வரும் தலைமுறை இதை மட்டும் படிக்கணும்
கம்பன் எங்கு போனான்
ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்

பெண் : லைலா செத்துப் போனாள்
மஜ்னு செத்துப் போனான்
நம்மை பாராமல்

ஆண் : கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்

பெண் : கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்

ஆண் : இது ஒரு புது முறை
இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை
வணங்கட்டும் இருவரை
கம்பன் எங்கு போனான்
ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்
கம்பன் எங்கு போனான்
ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்