Naanthan Mappille Song Lyrics

நான் தான் மாப்பிள்ளே பாடல் வரிகள்

Thodarum (1999)
Movie Name
Thodarum (1999) (தொடரும்)
Music
Ilaiyaraaja
Singers
Arun Mozhi, Gangai Amaran, Malaysia Vasudevan
Lyrics
Gangai Amaran

நான் தான் மாப்பிள்ளே நான் பொறந்த நாட்டிலே
நான் தான் மாப்பிள்ளே நான் பொறந்த நாட்டிலே
சூப்பரான பொண்ணு ஒண்ணத் தேடி
கை புடிப்பேன் பாட்டு ஒண்ணப் பாடி

ஹா ஒனக்கு நல்ல பொருத்தமான ஜோடி
வாச்சிருக்கு நூத்தில் ஒரு கோடி
காரு இங்கே ஊறுது நல்ல நேரம் போகுது தம்பி தம்பி
உங்க மாருதி சுஸுகிக்கே மாடு எதுக்கையே அன்புத் தம்பி
நான் தான் மாப்பிள்ளே.....ஹே ஹே ஹேய்

பொண்ணு அங்கே வீட்டிலே
ஹே... மாட்டு வண்டியில மாப்பிள்ள வந்தாச்சு...
மாப்பிள்ள வந்தார் மாப்பிள்ள வந்தார் மாட்டு வண்டியில
அப்டியா மாப்ளைக்கு தண்ணியக் காட்டு
மாட்டுக்கு காப்பி குடு.....ஹா...
மாட்டுக்கு காப்பியக் குடு
மாப்ளைக்கு தண்ணி காட்டு....ஹா...

மாப்ளைக்கு தண்ணி குடுத்தா என்ன
காப்பி குடுத்தா என்னப்பா
சந்தோசத்துல தாத்தாக்கு ஒண்ணும் புரியல

மாப்பிள கெடந்து துடிக்கிறாரு
அட பொண்ண வரச் சொல்லுங்க
தாத்தா பொண்ண வரச் சொல்லுங்க
பொண்ணு கொஞ்சம் ஏஜ்டா இருக்கா
அது என் சித்தி மாப்பிள்ள....

ஹோ பாட்டு வருமா..
பொண்ணுக்கு பாட்டு வருமா...பாக்யலஷ்மி
மியா மியா பூனைக் குட்டி
வீட்டிச் சுத்தும் பூனைக் குட்டி
அத்தான் மனசு வெல்லக் கட்டி
அவர் அழகைச் சொல்லடி செல்லக் குட்டி

நல்ல சகுனம்...பொண்ணுக்கு பாட்டு வருமான்னு கேட்டா
பாட்டையே பாடிக் காட்டிட்டா போங்கோ,.....ஹையோ...

சீதா தேடும் ஸ்ரீராமன் நீயே
நீ தான் எந்தன் உள் ஜீவன் போலே
பூலோகமே கொண்டடும் ராஜாதி ராஜனே
புள்ளைக்கென்ன கொடுப்பீங்க
நிஸமக பாம நீப ஸாநி ஸாநிப நிபம கமபக
புள்ளைக்கென்ன கொடுப்பீங்க...அப்படி போட்டு தாக்கு

தாக்கு தாக்கிட தரிகிட தகதிமி
தத்தீங்கு தத்தோம் தத்தீங்கு தத்தோம்
ததீங்கிட தோம் ததீங்கிட தோம்
ததீங்கிட தோம் தத் தோம்

என்ன இப்பவே ததீங்கிட தோமா...
பாப்பா இவ சின்னப் பாப்பா
ஏம்பா என்ன என்ன கேப்பே
மாமா கிண்டல் பண்ணலாமா
மாமீ... அஞ்சு லட்சம் கேக்கலாமா

அழகான மாப்பிள்ளே..அய்யய்ய யய்யய்
அஞ்சு லட்சம் கேக்குறான்
அழகான பொண்ணிருக்கு இந்தா
நீ அஞ்சு லட்சம் கேக்குறது பந்தா

யாராவது அழகான பொண்ணையும் குடுத்து
அஞ்சு லட்சம் பணமும் குடுப்பாங்களா
சரி விடுங்க பொண்ண நீங்க வெச்சுக்கங்க
அஞ்சு லட்சம் பணத்த மட்டும் குடுங்க

பொண்ணப் புடிச்சுப் போச்சு
அது புடிச்ச பின்னும் எதுக்கின்னும் வெட்டிப் பேச்சு
ஹேஹேஹே ஹேய்
திருப்பதி லட்டுதான் செட்டி நாட்டு புட்டுத்தான்
இழுத்து வளச்சு மயக்கி சிரிக்கிற
சிறு பொண்ணப் புடிச்சுப் போச்சு.....

காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
நீ கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
அருகில் வந்தாள் அதட்டி நின்றாள் கொண்டு போனாளே
ஒளி மயமான அரை பாட்டில்
என் பாக்கெட்டில் இருக்கிறது இந்தக்
கிழவி போடும் கூச்சல் இனிமேல் காதில் கேட்காது

நிலவா நிலவா இங்கு நடந்து வருவது
நதியா நதியா மெல்ல அசைந்து வருவது
பூலோகமே கொண்டாடும் நாள் இந்த நாளடி
புள்ளையாண்டான சுத்தி வாப்பா
நிஸமக பாம நீப ஸாநி ஸாநிப நிபம கமபக
தூக்கம் இன்னும் போகலப்பா...அப்படி போட்டு தாக்கு

நட்ட நடு ராத்திரியில்
கொட்டக் கொட்ட முழிச்சிருந்தே
தாலி கட்டும் நேரத்திலே தூங்கி விடாதே
அய்யரே மந்திரத்த சொல்லு பா

சர்வ மங்கள மாங்கல்யே சர்வாத்த சாதகே
அய்யரே மந்திரம் பத்திரம்
என்ன மாமா பொண்ணு ஜாக்கெட் போடாம
கவர்ச்சியா இருக்கு

இரு மாப்பிள்ள தூக்கத்துல
தாலிய மாத்திக் கட்டிடாதே
நீ தான் மாப்பிள்ளே
பொண்ணு கிட்ட மாட்டிக்கிட்டே

இப்ப என்ன கல்யாணம்னா லேசா
ஏப்பா தண்ணி போல செலவழிக்கணும்
காசா ஆமா என் ராசா
பொண்ண பெத்துட்டா பொறந்த வீட்டுக்கே
பாரம்தான் டா.....லுலுலுலு...

மாப்பிள்ளே கெடச்சுட்டான்
கைப் புடிச்சுக் கொடுத்துட்டான் நேரம்தான்டா
கல்யாணமா கல்யாணம் இது சூப்பரான கல்யாணம்
கல்யாணமா கல்யாணம் இது சூப்பரான கல்யாணம்