Thalaiyaam Poo Mudichu Song Lyrics

தாழையாம் பூ முடிச்சு பாடல் வரிகள்

Bhaaga Pirivinai (1959)
Movie Name
Bhaaga Pirivinai (1959) (பாகப்பிரிவினை)
Music
Viswanathan Ramamoorthy
Singers
T. M. Soundararajan
Lyrics
Kannadasan
தந்ததான தானதந்தா...ஆ...
தந்ததான தா... ஆ...தந்தானே...
தானே தந்தினன்னா... ஓ... ஓ...
தானானெனோ... ஏ...

தாழையாம் பூ முடிச்சு 
தடம் பாத்து நடை நடந்து

நடை நடந்து

வாழை இலை போல வந்த பொன்னம்மா 

பொன்னம்மா 

என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா


என்னம்மா

தாழையாம் பூ முடிச்சு 
தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா 
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா

பாளை போல் சிரிப்பிருக்கு 
பக்குவமாய் குணமிருக்கு

குணமிருக்கு

ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா 

கன்னையா 

இந்த ஏழைகளுக்கென்ன வேணும் 
சொல்லையா 

சொல்லையா

பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா 
இந்த ஏழைகளுக்கென்ன வேணும் 
சொல்லையா

தந்தான தந்தனத் தன்னே 
தனனன தானே தன்னே
தானேனேனேனா... னானானேனே...

தாயாரின் சீதனமும் ஓ...
தம்பிமார் பெரும் பொருளும் ஓ...

தாயாரின் சீதனமும் 
தம்பிமார் பெரும் பொருளும் 
மாமியார் வீடு வந்தால் போதுமா அது 
மானாபி மானங்களை காக்குமா
மானாபி மானங்களை காக்குமா

தாழையாம் பூ முடிச்சு 
தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா 
என் வாசலுக்கு வாங்கி வந்தது 
என்னம்மா( இசை )

தந்தனானே தானதந்தா... ஆ...
தானேனே தானேனேனேனே... ஏ...
தானேனன்னே.... தானே...
தானானெனோ... யியோ...

மானமே ஆடைகளாம் 
மரியாதை பொன் நகையாம்

மானமே ஆடைகளாம் 
மரியாதை பொன் நகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே

பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா 
இந்த ஏழைகளுக்கென்ன வேணும் 
சொல்லையா

அங்கம் குறைந்தவனை... ஈ...
அங்கம் குறைந்தவனை... ஓ...

அங்கம் குறைந்தவனை 
அழகில்லா ஆண் மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ 
பொன்னம்மாவீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா

மண் பார்த்து விளைவதில்லை 
மரம் பார்த்து படர்வதில்லை
மண் பார்த்து விளைவதில்லை 
மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா

பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா 
இந்த ஏழைகளுக்கென்ன வேணும் 
சொல்லையா

தாழையாம் பூ முடிச்சு 
தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா 
என் வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா

தந்தனனனே... ஏ... தானேனன்னே...