Kaviyan Kaviyan Bharathi Song Lyrics

கவிஞன் கவிஞன் பாடல் வரிகள்

Pandavar Bhoomi (2001)
Movie Name
Pandavar Bhoomi (2001) (பாண்டவர் பூமி)
Music
Bharathwaj
Singers
K. S. Chithra
Lyrics
Vairamuthu
கவிஞன் கவிஞன் பாரதி கேட்டான் காணி நிலத்தில் ஒரு வீடு
கவிஞன் வழியில் நானும் கேட்டேன் கவிதை வாழும் சிறு வீடு
ஒரு பக்கம் நதியின் ஓசை
ஒரு பக்கம் குயிலின் பாஷை
இளம் தென்னையின் கீற்று ஜன்னலை உரசும் திருவீடு
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
சிறு தென்னங்குயில்கள் பாடி எழுப்பிவிட
தென்றல் வந்து வாசல் தெளித்து விட
கொட்டும் பூக்கள் கோலம் வரையும்படி விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

தக தீம்த தீம்த திற திறனா
தக தீம்த தீம்த திற திறனா
தக தீம்த தீம்த திற திறதிறதிற திறனா
தக தீம்த தீம்த திற திறனா
தக தீம்த தீம்த திற திறனா
தக தீம்த தீம்த திற திறதிறதிறதிற திறனா

கனா கண்டு தூங்கும் வரையில் நிலா வந்து கதைகள் சொல்ல
கண்ணாடி முற்றம் ஒன்று வேண்டுமே
மின்னல் வந்து தீண்டும் போது வெட்கம் வந்து மூடிக்கொள்ள
கண் படாத ஜோடி ஒன்று வேண்டுமே
பறந்தோடும் பறவை கூட்டம் இரவோடு தங்கி செல்ல
மரகத மாடம் ஒன்று வேண்டுமே
கொலுசொலியும் சிரிப்பொலியும் எதிரொலித்து எதிரொலித்து இசை வரணும்
இந்த வாசல் வந்தால் கோபம் தீரும்படி
வீசும் காற்றில் ஆயுள் கூடும்படி
பேசும் வார்த்தை கவிதை ஆகும்படி விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே

கொடைக்கானல் மேகம் வந்து மொட்டை மாடி மேலே நின்று
குடிதண்ணீர் பொழியும் வண்ணம் வேண்டுமே
வாழ்ந்தவர்கள் கதையை சொல்லி வருங்கால கனவை எண்ணி
ஊஞ்சலாட திண்ணை ஒன்று வேண்டுமே
தலைமுறை மாறும்போது பரம்பரை தாங்கும் வண்ணம்
தங்கமணி தூண்கள் ஏழு வேண்டுமே
சிலர் நினைவாய் பெரும் கனவாய்
அரண்மனையாய் அதிசயமாய் இது வருமோ
நல்லோர் கண்கள் கண்டு போற்றும்படி
பொல்லார் மனசும் நின்று வாழ்த்தும்படி
எல்லா உறவும் வந்து வாழும்படி விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
சிறு தென்னங்குயில்கள் பாடி எழுப்பிவிட
தென்றல் வந்து வாசல் தெளித்து விட
கொட்டும் பூக்கள் கோலம் வரையும்படி விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே
விரும்புதே மனசு விரும்புதே