Idhuthaanaa artwork

Song lyrics

Idhuthaanaa

இதுதானா இதுதானா

131114 views

Singer · K. S. Chithra

Lyrics · Thamarai

The lyrics

இதுதானா இதுதானா
எதிர்ப்பார்த்த அந்நாளும் இதுதானா
இவந்தானா இவந்தானா
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானே
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
(இதுதானா..)

இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வளைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
வெக்கங்களும் வெட்கப்பட்டு பட்டு ஒளிந்திடுமே
(இதுதானா..)

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பார் என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
அஹ ஹாஹஹா.
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
(பகலிலும்..)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Saamy

Keep listening

More from this movie

  1. Aarumuga Saamy திருநெல்வேலி அல்வாடா

    Sung by Sriram Parthasarathy

  2. Kalyaanam Thaan Kattikittu கல்யாணம்தான் கட்டிக்கிட்டு

    Sung by KK, Srilekha Parthasarathy, Yugendran

  3. Idhuthaanaa இதுதானா இதுதானா

    Sung by K. S. Chithra

  4. Pudichirukku ஐயய்யோ புடிச்சிருக்கு

    Sung by Hariharan, Mahathi