Song lyrics
Paadi Thirintha
பாடித் திரிந்த எந்தன் தோழி
2498 views
Singer · Ilaiyaraaja, S. P. Balasubramaniam
Lyrics · R. V. Udayakumar
The lyrics
ஓ... ஓ... ஹோ... ஓ... ஓ... ஹோ...
பாடித் திரிந்த எந்தன் தோழி
ஓ... பாடும் குயிலுக்கென்ன வேலி
கதை பேசும் ஊருக்குள்ளே
விடுகதையாய் நின்றாயா
உறவொன்றை தவறாய்ப் பேசும்
பரிதாபம் கண்டாயா
கண்ணே மணியே வருந்தாதே..(பாடித்)
அந்த வான் நிலவில் ஒரு களங்கம் சொல்வார்
குற்றம் உள்ள கண்ணில் குறையாய்த் தெரியும்
எதிர்க் காற்றினிலே மண்ணைத் தூற்றிச் செல்வார்
தூற்றுபவர் மேலே கறை தான் படியும்
கண்ணீர் ஆற்றில் நீந்தும் மீனே மீனே
உண்மைச் சொன்னால் அது வீணே வீணே
என் ஜென்மமே உனக்காகத்தான்
வரும் ஜென்மங்கள் உன்னோடு தான்..(பாடித்)
எதிர்க் காலம் உண்டு நல்ல வாழ்வும் உண்டு
மின்னும் உந்தன் கண்கள் சொல்லுதே கண்மணி
பழி பாவத்துக்கு ஒரு தீர்ப்பும் உண்டு
தர்ம தேவன் சொன்னான் காதிலே கண்மணி
தூற்றும் ஊரே உன்னைப் போற்றும் போற்றும்
அன்பே அன்பின் விளக்கேற்றும் ஏற்றும்
வரும் நாளெல்லாம் திருநாளம்மா
இனி பூபாளம் நீதானம்மா........(பாடித்)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Oor Ooraga Pogum ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு
Sung by Sandhya
-
Oranjaram Usharaiya Usharu ஓரஞ்சாரம் உஷாரையா
Sung by S. P. Balasubramaniam
-
Gayathiri Ketkum காயத்திரி கேட்கும் மாயத் திரை விலகும்
Sung by Bhavatharani, P. Unnikrishnan
-
Kolakiliye Kolakiliye கோலக் கிளியே
Sung by S. P. Balasubramaniam
-
Nenavu Therinja நெனவு தெரிஞ்ச நாள் முதலா
Sung by K. S. Chithra, Mano
-
Paadi Thirintha பாடித் திரிந்த எந்தன் தோழி
Sung by Ilaiyaraaja, S. P. Balasubramaniam