Mailaanji Mailaanji artwork

Song lyrics

Mailaanji Mailaanji

மயிலாஞ்சி மயிலாஞ்சி

77667 views

Singer · Pradeep Kumar, Shreya Ghoshal

Lyrics · Yugabharathi

The lyrics

மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

கண்ணாடி போல
காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம்
பாத்து நிக்குறேன்

கண்ணால நீயும்
நூல விட்டு பாக்க
காத்தாடியாக
நானும் சுத்துறேன்

சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்

பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமா நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

கோயில் மணியோசை
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே

தாயின் உடல் சூட்ட
மறவாத குழந்தை போல
உசுரே ஊறுகின்றதே


விளக்கும் கூட
வெள்ளி நிலவாக
தெரியும் கோலம் என்னவோ

கணக்கில்லாம
வந்து விடும் காதல்
குழப்பும் செய்தி அல்லவோ

அழகா நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவலை
உன்ன நான் தாலாட்டவேனே மனகூட்டுல

மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

பல்லாக்கு போல நீயும்
என்ன தூக்கி
தேசாதி தேசம் போக எண்ணுறேன்

வெள்ளாட்டு மேல
பட்டுபூச்சி போல
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்

சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்

நூறாகுறேன்

பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
சேத்தேனே உன்ன ஆஞ்சி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Namma Veettu Pillai

Keep listening

More from this movie

  1. Yenga Annan Annpai எங்க அண்ணன் அன்ப அள்ளி

    Sung by Nakash Aziz, Sunidhi Chauhan

  2. Mailaanji Mailaanji மயிலாஞ்சி மயிலாஞ்சி

    Sung by Pradeep Kumar, Shreya Ghoshal

  3. Unkoodave Porakkanum (Male) உன் கூடவே பொறக்கணும்

    Sung by Sid Sriram

  4. Unkoodave Porakkanum உன் கூடவே பொறக்கணும்

    Sung by Shashaa Tirupati

  5. Jigiri Dosthu ஜிகிரி தோஸ்து

    Sung by Jayamoorthy, Anthakudi Ilayaraja

  6. Kaantha Kannalaki காந்தக் கண்ணழகி

    Sung by Anirudh Ravichander, Neeti Mohan

  7. Namma Veettu Pillai இவன் நம்ம வீட்டு பிள்ளை

    Sung by D. Imman