Masaru Ponnae Varuga artwork

Song lyrics

Masaru Ponnae Varuga

மாசறு பொன்னே வருக

52022 views

Singer · Minmini, Swarnalatha

Lyrics · Vaali

The lyrics

மாசறு பொன்னே வருக

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே
பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே
திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே

பாவம் விலகும் வினையகலும் உனைத் துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும் இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக

கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Devar Magan

Keep listening

More from this movie

  1. Ada Puthiyathu புதியது பிறந்தது

    Sung by Malaysia Vasudevan

  2. Potripadadi போற்றிப் பாடடி

    Sung by Mano, S. P. Balasubramaniam

  3. Vanam Thottu வானம் தொட்டு

    Sung by S. P. Balasubramanyam

  4. Santhupottu சாந்து பொட்டு

    Sung by S. P. Balasubramaniam

  5. Inji Idupazhagi இஞ்சி இடுப்பழகி

    Sung by Kamal Haasan, Minmini, S. Janaki

  6. Masaru Ponnae Varuga மாசறு பொன்னே வருக

    Sung by Minmini, Swarnalatha

  7. Manamagale Manamagale மண மகளே மண மகளே

    Sung by Minmini, Swarnalatha

  8. Vaanam Thottu Pona வானம் தொட்டுப் போன

    Sung by S. P. Balasubramaniam