Thaagam Theerea artwork

Song lyrics

Thaagam Theerea

தாகம் தீரகானல் நீரை

4329 views

Singer · Yazin Nizar, Padmalatha

Lyrics · Asmin

The lyrics

தாகம் தீரகானல் நீரை
காதல் இன்றுகாட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே

கண்கள் ஈரத்தை
காணும் நேரத்தில்
விழி வழி உயிர் போகுதே
அந்தி நேரத்தில்
அன்பின் ஏக்கத்தில்
உயிரேனை மனம் தேடுதே

தாகம் தீர
கானல் நீரை
காதல் இன்று
காட்டுதே
வா சகி வா சகி
வா சகி வா சகி
வானம் போல் வாழலாம்
நாம் வா சகி
வா சகி வா சகி
வா சகி வா சகி
காதலை நெஞ்சிலே
ஏந்திடும் வா சகி

உயிர் தொடும் பனியே
ஊசியிலை காடுகளில்
வீசி வரும் காற்றும்
சுடுகிறதேய் ஓ
இது என்ன கனவோ
துணை இழந்த
ஒரு பறவை
துடி துடித்து
அழுதே சோகத்திலே ஓ ஹோ

ஒன்றின் உயிர் போகும்
இல்லை ரெண்டும் வாழும்
இறைவன் அவன் விதியை விதியை
யாருசொல்ல கூடும்
தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே

சிறகுகள் கொடுத்தே
சிறைபிடிக்கும் காதலிலே
சிலுவைகளை இதயம் சுமக்கிறதே
ஓ ஓ
வழிகளை கொடுத்தே
வருடி விடும் வாழ்க்கையிலே 

உறவுகளின் சதிகள் தொடர்கிறதே ஓ ஓ
காதல் கொண்டு வாழும்
காந்தள் மலர் நாளும்
அடை மழையில் நனைந்தே நனைந்தே சூரியனை தேடும்

தாகம் தீர கானல் நீரை
காதல் இன்று காட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே
கண்கள் ஈரத்தை
காணும் நேரத்தில்
விழி வழி உயிர் போகுதே
அந்தி நேரத்தில்
அன்பின் ஏக்கத்தில்
உயிரேனை மனம் தேடுதே

வா சகி வா சகி
வா சகி வா சகி
வானம் போல் நாமும்
வாழலாம் வா சகி
வா சகி வா சகி
வா சகி வா சகி
காதலை நெஞ்சிலே
ஏந்திடும் வா சகி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Amara Kaaviyam (2014)

Keep listening

More from this movie

  1. Dheva Dhevadhai தேவ தேவதை

    Sung by Ranjith, Madhu Iyer

  2. Thaagam Theerea தாகம் தீரகானல் நீரை

    Sung by Yazin Nizar, Padmalatha

  3. Mounam Pesum மௌனம் பேசும் வார்த்தை யாவும்

    Sung by K. S. Chithra, Sowmya Mahadevan