Madai Thiranthu

Song lyrics

Madai Thiranthu

மடை திறந்து தாவும் நதியலை நான்

28078 views

Singer · S. P. Balasubramaniam

Lyrics · Vaali

The lyrics

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ…

லலலலலால…………

………………………….

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ…

……………………..

நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்…

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ…

லலலலலால…………
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nizhalgal

Keep listening

More from this movie

  1. Ithu Oru Pon Malai இது ஒரு பொன்மாலை பொழுது

    Sung by S. P. Balasubramaniam

  2. Madai Thiranthu மடை திறந்து தாவும் நதியலை நான்

    Sung by S. P. Balasubramaniam

  3. Poongathavae thaal thiravai பூங்கதவே தாள் திறவாய்

    Sung by Deepan Chakravarthy, Uma Ramanan

  4. Thoorathil Naan Kanda Un Mugam தூரத்தில் நான் கண்ட உன் முகம்

    Sung by S. Janaki