Malare Malare Theriyatha artwork

Song lyrics

Malare Malare Theriyatha

மலரே மலரே தெரியாதோ

13224 views

Singer · P. Susheela

Lyrics · Kannadasan

The lyrics

மலரே மலரே தெரியாதோ
மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை காண வந்தால்
நிலையை சொல்வாயோ என் கதையை சொல்வாயோ
மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்

காட்சிகள் மாறும் நாடகம் போலே
காலமும் மாறாதோ காலமும் மாறாதோ
காலங்களாலே வாழ்க்கை செல்லும்
பாதையும் மாறாதோ பாதையும் மாறாதோ
யார் மாறிய போதும் பாவை எந்தன்
இதயம் மாறாது என் நிலையும் மாறாது
மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்

கண்களில் தோன்றும் காட்சியில் ஒன்றாய்
கலந்தே நின்றாரே கலந்தே நின்றாரே
நினைவுகள் தோன்றும் நெஞ்சில் என்றும்
நிறைந்தே நின்றாரே நிறைந்தே நின்றாரே
இனி அவருடன் வாழ்வில் ஒன்று சேரும்
திருநாள் வாராதோ என் மண நாள் வாராதோ
மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Then Nilavu

Keep listening

More from this movie

  1. Malare Malare Theriyatha மலரே மலரே தெரியாதோ

    Sung by P. Susheela

  2. Kallaiyum Neeye காலையும் நீயே

    Sung by A. M. Rajah, S. Janaki

  3. Pattu Padava பாட்டு பாடவா

    Sung by A. M. Rajah

  4. Oho Enthan Baby ஓஹோ எந்தன்

    Sung by A. M. Rajah, S. Janaki

  5. Nilavum Malarum நிலவும் மலரும்

    Sung by A. M. Rajah, P. Susheela

  6. Chinna Kannile சின்ன கண்ணிலே

    Sung by A. M. Rajah, P. Susheela