Povomaa Oorkolam artwork

Song lyrics

Povomaa Oorkolam

போவோமா ஊர்கோலம்

91592 views

Singer · S. P. Balasubramaniam, Swarnalatha

Lyrics · Gangai Amaran

The lyrics

பெண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்

பெண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...

***

ஆண் : அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா

பெண் : பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா

ஆண் : குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா

பெண் : சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா

ஆண் : பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு

பெண் : வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு

ஆண் : அதிசயமான பெண்தானே

பெண் : புதுசுகம் தேடி வந்தேனே

ஆண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்

ஆண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...

***

பெண் : கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்

ஆண் : கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்

பெண் : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே

ஆண் : உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே

பெண் : கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும்

ஆண் : அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்

பெண் : போதும் போதும் உம் பாட்டு

ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு

பெண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...

ஆண் : ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்

பெண் : காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்

ஆண் : போவோமா ஊர்கோலம் ....

பெண் : பூலோகம் எங்கெங்கும்...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Chinna Thambi

Keep listening

More from this movie

  1. Ada Uchanthala அட உச்சந்தல

    Sung by Mano

  2. Povomaa Oorkolam போவோமா ஊர்கோலம்

    Sung by S. P. Balasubramaniam, Swarnalatha

  3. Aracha Sandhanam அரைச்ச சந்தனம்

    Sung by S. P. Balasubramaniam

  4. Kuyila Pudichchu குயில புடிச்சி

    Sung by S. P. Balasubramaniam

  5. Nee Engey En Anbe நீ எங்கே என் அன்பே

    Sung by Swarnalatha

  6. Thooliyile Ada Vantha தூளியிலே ஆடவந்த

    Sung by K. S. Chithra, Mano