Kalyana Ponnu Boomiyila artwork

Song lyrics

Kalyana Ponnu Boomiyila

கல்யாண பொண்ணு

3878 views

Singer · Malasiya Vasudevan, S. P. Sailaja

Lyrics · Vaali

The lyrics

ஆண் : ஹேய் கல்யாண பொண்ணு பூமியில ஒண்ணு
கல்யாண பொண்ணு பூமியில ஒண்ணு
அழகெல்லாம் மொத்தம் இருக்கு அணையாத குத்துவிளக்கு
பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்

பெண் : கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல
கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல
முன்னால வச்சக் கால எடுக்காத மச்சக்காள
பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்

ஆண் : ஹேய் கல்யாண பொண்ணு பூமியில ஒண்ணு
பெண் : அட கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல

ஆண் : தங்கச் சிலைதான் எங்க தங்கச்சியும் தான்
வெறும் தென்னம் பிள்ள கீரிப்பிள்ள உங்க புள்ளத்தான்
பெண் : கண்ணுக்கழகா எங்க வண்ணக் குமரன் அட
சிங்கப்பல்லு சப்ப மூக்கு உங்கப் பொண்ணுதான்

ஆண் : உன்னப் போல ஜாடை உங்க மாப்பிள்ள
பெண் : அண்ணன் மூஞ்சிப் பாத்தா தங்க தேவல
ஆண் : வம்பு வழக்கெதுக்கு மொத்தத்துல உனக்கு
புத்தி கொஞ்சம் கிறுக்கு போம்மா

பெண் : கல்யாண ஹோய் புள்ள பூமியெங்கும் இல்ல
ஆண் : அழகெல்லாம் மொத்தம் இருக்கு
அணையாத குத்துவிளக்கு
பெண் : பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்
ஆண் : ஹேய் கல்யாண பொண்ணு பூமியில ஒண்ணு..

பெண் : கெட்டிக்காரன் தான் தொடத் தட்டும் வீரன்தான்
அட சொல்லப் போனா எங்கப் புள்ள சூரப்புலி தான்
ஆண் : ஹேய் நல்ல குடும்பம் ரோஷமுள்ள குடும்பம்
புள்ளி மானப் போல மானம் காக்கும் எங்க குடும்பம்

பெண் : சத்தம் போட்டு நீதான் ரொம்ப கூவுறே
ஆண் : சும்மா நீயும் ஏம்மா துள்ளித் தாவுறே
பெண் : ஒண்ணுக்கொண்ணு துணையா
ஒண்ணுக்குள்ள இணையா
ஒத்துப் போனா சரிதான் போய்யா

ஆண் : ஹேய் கல்யாண பொண்ணு பூமியில ஒண்ணு
பெண் : அட கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல
பெண் : முன்னால வச்சக் கால எடுக்காத மச்சக்காள
பொன்னூஞ்சல் பூமாலை பட்டாடை கொண்டாடும்

பெண் : அட கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல
கல்யாண புள்ள பூமியெங்கும் இல்ல..ஹே ஹெஹ்ஹ...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kazhugumalai Kallan

Keep listening

More from this movie

  1. Uchi Malaiyil Oorirukka உச்சி மலையில் ஊர்

    Sung by Mano, Vani Jayaram

  2. Oor Pesum Ulagam Pesum ஊர் பேசும் உலகம்

    Sung by Malasiya Vasudevan

  3. Kalyana Ponnu Boomiyila கல்யாண பொண்ணு

    Sung by Malasiya Vasudevan, S. P. Sailaja

  4. Kaattiputtan Thannithan எலேய் அம்மாசி....சன்னாசி....

    Sung by Malasiya Vasudevan

  5. Nanbargale Nanbargale நண்பர்களே நண்பர்களே

    Sung by Prabakar