Oor Pesum Ulagam Pesum artwork

Song lyrics

Oor Pesum Ulagam Pesum

ஊர் பேசும் உலகம்

1787 views

Singer · Malasiya Vasudevan

Lyrics · Vaali

The lyrics

ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன் தான் கழுகுமலைக் கள்ளன்
உள்ளத்திலே நல்ல உள்ளம்
உள்ளவன்தான் கழுகு மலைக் கள்ளன்

எல்லாரும் கொண்டாடும் நல்லவன் தான்
பொல்லாத புலியானான்....
இல்லாத ஏழைக்கு எப்பொழுதும்
நம்பிக்கை ஒளியானான்...

ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன் தான் கழுகுமலைக் கள்ளன்

விழுந்த பின்னும் விதையைப் போலே
எழுந்து நின்னானே
விருட்சமாகி ஊருக்கெல்லாம்
நிழலைத் தந்தானே

மக்களெல்லாம் கும்புட்டு வணங்கும்
மன்னன் இவன் தானே
மந்தைக்கெல்லாம் மேய்ப்பனைப் போல
காவல் இருப்பானே..
துன்பத்தில் யாருக்கும் கைக் கொடுப்பான்
துக்கத்தை தீர்த்து கண் துடைப்பான்

ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன் தான் கழுகுமலைக் கள்ளன்

இருண்ட வீட்டில் விளக்க எடுத்து
ஏத்தி வைப்பானே
இவன நம்பி உலையை வைப்பாள்
ஏழை தாய்தானே

இல்லாருக்கெல்லாம் வள்ளலப் போல
எல்லாம் தருவானே
எங்க நீதி கண்கள மூடும் அங்க வருவானே

வீரத்தில் இவன் போல் வேங்கை இல்லை
உள்ளத்தப் பாத்தா பச்சப்புள்ள

ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன் தான் கழுகுமலைக் கள்ளன்
உள்ளத்திலே நல்ல உள்ளம்
உள்ளவன்தான் கழுகு மலைக் கள்ளன்

எல்லாரும் கொண்டாடும் நல்லவன் தான்
பொல்லாத புலியானான்....
இல்லாத ஏழைக்கு எப்பொழுதும்
நம்பிக்கை ஒளியானான்...

ஊர் பேசும் உலகம் பேசும்
உத்தமன் தான் கழுகுமலைக் கள்ளன்....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kazhugumalai Kallan

Keep listening

More from this movie

  1. Uchi Malaiyil Oorirukka உச்சி மலையில் ஊர்

    Sung by Mano, Vani Jayaram

  2. Oor Pesum Ulagam Pesum ஊர் பேசும் உலகம்

    Sung by Malasiya Vasudevan

  3. Kalyana Ponnu Boomiyila கல்யாண பொண்ணு

    Sung by Malasiya Vasudevan, S. P. Sailaja

  4. Kaattiputtan Thannithan எலேய் அம்மாசி....சன்னாசி....

    Sung by Malasiya Vasudevan

  5. Nanbargale Nanbargale நண்பர்களே நண்பர்களே

    Sung by Prabakar