Thottu Thottu Pallakku artwork

Song lyrics

Thottu Thottu Pallakku

தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது

4960 views

Singer · S. P. Balasubramaniam, Sujatha Mohan

Lyrics · Muthulingam

The lyrics

தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது
சொக்க வைக்கும் சிங்காரம் கூடுது
மாயமோ என்ன ஜாலமோ ராத்திரி நடு ராத்திரி
இரு உள்ளம் பொங்கும் வெள்ளம் மாதிரி..(தொட்டுத்)

ஹோய் என் மேல் ஒரு சாமரம் போல்
தென்றல் வந்து வீசுதே
மண் மேல் ஒரு மேனகை போல்
முன்னால் நின்று பேசுதே

உன்னால் ஒரு தாமரைப் பூ மொட்டவிழ்ந்து ஆடுதே
உள்ளே புதுத் தேன் சுரந்து ஓடை என ஓடுதே
வஞ்சி நீ பூச் செண்டு வந்ததோ பொன் வண்டு
கேக்குதே ரீங்காரம் மெல்லவே காதோரம்
இன்பமோ கொள்ளை இன்பமோ
ஆடல் தினம் பாடல் இது காதல் ராஜ்ஜியம் (தொட்டுத்)

முன்னம் மணி மாளிகையில்
வண்ணக் கிளி வாழ்ந்தது
இந்நாள் இது நீ விரித்த ஆசை வலையில் வீழ்ந்தது
எங்கே எது நேரும் என்று யாரும் சொல்லக் கூடுமோ
காலம் நமை சேர்த்து வைத்து நாளும் விளையாடுமோ

என்னையே பந்தாடும் மன்னவன் வாலிபம்
என்றுமே வந்தாடும் கண்மணி ஞாபகம்
பார்வையில் இன்ப ஊர்வலம்
ஆடல் தினம் பாடல் இது காதல் ராஜ்ஜியம் (தொட்டுத்)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kadhal Rojave

Keep listening

More from this movie

  1. Ilavenil ithu இளவேனில் இது

    Sung by S. P. Balasubrahmanyam, Chithra

  2. Kalyana Jodi Kacheri Melam கல்யாண ஜோடி கச்சேரி மேளம்

    Sung by S. P. Balasubramaniam

  3. Chinna Vennila Sainthathe சின்ன வெண்ணிலா சாய்ந்ததே தோளில்

    Sung by Anuradha Sriram, Mano

  4. Sirithale Chinna Minmini சிரித்தாளே சின்ன மின்மினி

    Sung by Minmini

  5. Thottu Thottu Pallakku தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது

    Sung by S. P. Balasubramaniam, Sujatha Mohan

  6. Ninaitha Varm Kettu நினைத்த வரம் கேட்டு

    Sung by P. Unnikrishnan, Sunitha Sarathy

  7. Pudhu Ponnu Mappilla புதுப் பொண்ணு மாப்பிள்ள

    Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam

  8. Manam Pona Pokkil மனம் போன போக்கில்

    Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam

  9. Midnight Mama Naam மிட்டு நைட்டு மாமா நாம்

    Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam