Baratha Samuthayam artwork

Song lyrics

Baratha Samuthayam

பாரத சமுதாயம் வாழ்கவே

56144 views

Singer · K. J. Yesudas

Lyrics · Bharathiar

The lyrics

பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை ;
ஒப்பி லாத சமுதாயம்
உலகத்துக் கொருபுதுமை - வாழ்க !
(பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ...)

சரணங்கள்
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை யினியுண்டோ ? (புலனில்
வாழ்க்கை யினியுண்டோ ? - நாமிழந்த
வாழ்க்கை யினியுண்டோ ?)

இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு -
கனியுங் கிழங்குந் தான்யங்களும்
கணக்கின்றித்தரு நாடு - (இது
கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்
கணக்கின்றி தரு நாடு )

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ ? ....
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளுங் காப்போம்
தனி யொருவனுக் குணவில்லை எனில்
ஜகத்தினை அழித் திடுவோம் (வாழ்க ! பாரத சமுதாயம் வாழ்கவே !)
(ஜய ஜய ...)

"எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்"
என்றுரைத்தான் கண்ண பெருமான்
எல்லோரும் அமரநிலை யெய்துநன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - (ஆம்,
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம், ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்) - இங்கு
(மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்க மினியுண்டோ ?)

எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்தியா மக்கள்
எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ! - (நாம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ! - ஆம் !
எல்லோரும் இந்நாட்டு மன்னர் !) - வாழ்க -
பாரத சமுதாயம் வாழ்கவே
(ஜய ... ஜய)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Bharathi

Keep listening

More from this movie

  1. Ethilum Ingu எதிலும் இங்கு இருப்பான்

    Sung by Madhu Balakrishnan

  2. Mayil Pola Ponnu onnu மயில் போல பொண்ணு

    Sung by Bhavatharani

  3. Nirpathuve Nadapathuve நிற்பதுவே நடப்பதுவே

    Sung by Harish Raghavendra

  4. Agini Kunjondru அக்னி குஞ்சொன்று

    Sung by K. J. Yesudas

  5. Keladaa Manida கேளடா மானிடாவா

    Sung by Rajkumar Bharathi

  6. Ninnaichcharan Adainthen நின்னைச் சரணடைந்தேன்

    Sung by Bombay Jayashree

  7. Vante Matharam வந்தே மாதரம் ஜய

    Sung by Madhu Balakrishnan

  8. Nallathor Veenai நல்லதோர் வீணைசெய்தே

    Sung by Ilaiyaraaja, Mano

  9. Baratha Samuthayam பாரத சமுதாயம் வாழ்கவே

    Sung by K. J. Yesudas