Song lyrics
Idhayam Idhayam
இதயம் இதயம் இணைகிறதே
5168 views
Singer · K. S. Chithra, Krishnaraj
Lyrics · Agathiyan
The lyrics
இதயம் இதயம் இணைகிறதே
இது ஒரு புது கவிதை
இனியும் இனியும் தொடர்ந்திடுமே
தினம் தினம் ஒரு கவிதை...(இதயம்)
பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு
பூ மேனி திரிந்தாள் நீ தழுவியே செல்லு
நான் இங்கு நலமே நலமே
நலமா நலமா காற்றே சொல்லு...(இதயம்)
நெஞ்சம் மணம் நிறைந்த மஞ்சம்
இரவுகளில் அஞ்சும் விழி சிவந்து கெஞ்சும்
கொஞ்சம் மயக்கம் வந்து கொஞ்சும்
தனிமையென மிஞ்சும் உடல் படர தஞ்சம்
ஹோ...மாலையில் மலரும் காலையில் மணக்கும்
காயங்கள் பார்த்து தனிமையில் சிரிக்கும்..(பூங்காற்றே)
தேகம் மழை பொழியும் மேகம்
கரைந்து விடும் மேகம் தணியும் அந்த தாகம்
யாகம் ஆசைகளின் வேகம் காமனது யோகம்
இரண்டும் ஒரு பாகம்
ஹோ..ஊடலில் தானே தேடலின் தொல்லை
கூடலில்தானே ஊடலின் எல்லை (பூங்காற்றே)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Idhayam Idhayam இதயம் இதயம் இணைகிறதே
Sung by K. S. Chithra, Krishnaraj
-
Kidaichiruchu கெடைச்சிருச்சு கெடைச்சிருச்சு
Sung by Krishnaraj, Anuradha Sriram
-
Manimadathu மணி மாடத்து மஞ்சள் நிலா
Sung by P. Unnikrishnan
-
Meenakshi Kaiyil மீனாட்சி கையில் உள்ள கிளியே
Sung by K. S. Chithra, Kalpana Raghavendar
-
Hello Hello விண்ணுக்கும் மண்ணுக்கும்
Sung by Sabesh, Sujatha Mohan