Chithirai Maadhathu Nilavu artwork

Song lyrics

Chithirai Maadhathu Nilavu

சித்திரை மாதத்து நிலவு வருது

3099 views

Singer · K. S. Chithra, Mano

Lyrics · Vaali

The lyrics

சித்திரை மாதத்து நிலவு வருது
வழி விடு வழி விடு மேகமே வழி விடு
மந்திர கானமும் மோகங்கள் தருது
விலகிடு விலகிடு நாணமே விலகிடு

மழைபோல் வருவாய் எனக்காக
நிலம்போல் தவிப்பேன் அதற்காக
சித்திரை மாதத்து நிலவு வருது
வழி விடு வழி விடு மேகமே வழி விடு

நீரோடும் ஆறாக நீ ஆகும் போது
நான்தானே மீன்போல நீராடுவேன்
மீன்போல நீ வந்து நீராடும்போது
நான்தானே தாளாமல் போராடுவேன்

காயங்கள் ஏதும் ஆகாமலே
காலோடு காலும் கையோடு கையும் பிண்ணாதோ
காவல்தான் மீறாதோ ஆவல்
நீ என்னை கொஞ்ச பட்டும் படமாலே
ஹும் ஹும் ஹும் தோகை மேனி வாடும் (சித்திரை)

ஊரெங்கும் ஓசைகள் ஓய்கின்ற நேரம்
ஆரம்பம் ஆகாதோ ஆராதனம்
நான் பாடும் ராகங்கள் ஒன்றல்ல நூறு
ஆனாலும் நீதான் என் ஆரோகணம்

தாளங்கள் என்றும் மாறாமலே
பாவங்கள் யாவும் பாட்டோடு சேரும்
நாள்தானோ..........
ஆதாரம் நீதானோ அன்பே
ஆனந்தம் என்றும் சந்தம் கெடாமலே
ஹும் ஹும் ஹும் காதல் கீதம் பாட (சித்திரை)
 

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Paadu Nilaave

Keep listening

More from this movie

  1. Malaiyoram Veesum Kaathu மலை ஓரம் வீசும் காற்று

    Sung by S. P. Balasubramaniam

  2. Kuthamma Nellu Kuthu குத்தம்மா நெல்லு குத்து

    Sung by K. S. Chithra

  3. Paadungal Paattu Paadungal பாடுங்கள் பாட்டு பாடுங்கள்

    Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam

  4. Kokkarako Koovura கொக்கரககொக்கோ

    Sung by K. S. Chithra, Mano

  5. Chithirai Maadhathu Nilavu சித்திரை மாதத்து நிலவு வருது

    Sung by K. S. Chithra, Mano

  6. Malaiyoram Female மலையோரம் வீசும் காற்று

    Sung by K. S. Chithra

  7. Vaa Veliyae Ilam Poonguyile வா வெளியே இளம் பூங்குயிலே உன்

    Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam