Siru Punnagai artwork

Song lyrics

Siru Punnagai

சிறு புன்னகை

5530 views

Singer · V. Prasanna

Lyrics · Yugabharathi

The lyrics

சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

உறவு தொடங்குவதும் உயிர்கள் பழகுவதும்
இனிய கவிதை என நினைக்கிறேன்
அவளின் அணுகுமுறை பழகும் இயல்பு நிலை
கலந்த நிமிடங்களை இரசிக்கிறேன்
சில நாட்கள் தீண்டும் நினைவிலே
பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே
அவள் பேசும் பேச்சைக் கேட்க கேட்க புதுமையே
அந்த நேரம் மீண்டும் வாய்த்திடாத இனிமையே
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி

வரவு செலவுகளில் குறையும் பொழுதுகளை
புதிய உறவுகளில் நிறைத்திடு
அறிவு வெளியுலகில் அடையும் அவஸ்தைகளை
பொழியும் நிலவொளியில் பொசுக்கிடு
இன்பம் யாவும் காட்டும் மனத்திரை
நம்மை மாற்றும் காலம் வகுப்பறை
இதில் பாடம் கேட்கும் நீயும் நானும் ஒருவனே
நம்மை பேச்சையாக்கும் தோழன் யாரு இறைவனே
சிறு புன்னகை ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும் பிறர் மனம் அபகரி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Pokkisham

Keep listening

More from this movie

  1. Siru Punnagai சிறு புன்னகை

    Sung by V. Prasanna

  2. Kanavu sila samayam கனவு சில சமயம்

    Sung by V. Prasanna

  3. Ulagam Ninaivil Illai உலகம் நினைவில் இல்லை

    Sung by Mahathi, V.Prasanna

  4. Anjal Petti அஞ்சல் பெட்டியைக்

    Sung by Karthik

  5. Nila Ne Vaanam நிலா நீ வானம்

    Sung by Chinmayi, Vijay Yesudas

  6. Mozhi Illamalae மொழி இல்லாமலே

    Sung by Madhu Balakrishnan

  7. Aalagu Mugam அழகு முகம் மலர்ந்து

    Sung by V. Prasanna

  8. Mudru Naal Aagume மூன்று நான் ஆகுமே

    Sung by Karthik

  9. Ohh Ohh தீர்ந்ததே பெருங்கடல் தாகமே

    Sung by Vijay Yesudas

  10. Varum Vazhi Engum ​வரும் வழி எங்குமே

    Sung by Ranjani