Chinna Poongili artwork

Song lyrics

Chinna Poongili

சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி

8686 views

Singer · S. Janaki, S. P. Balasubramaniam

Lyrics · Vaali

The lyrics

சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி
இனிக்கும் நன்நாள் இது
வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி
இணையும் பொன் நாள் இது

சோலையோ நடுச் சாலையோ
தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ ஏங்கினேன்
இதயம் இனியும் சரணம்......(சின்ன)

ஆசை தீர பேச வேண்டும் பூங்காவிலே
ஆயுள் காலம் யாவும் உன்னை நீங்காமலே
உன்னைச் சேர ஏங்கும் மாது
எல்லைக் கோட்டை தாண்டாதா
தென்றல் காற்றை தீண்டச் சொல்லி
தென்னங்கீற்று வேண்டாதா

வேண்டினால் விரல் தீண்டுமே
தீண்டினால் சுகம் தோன்றுமே
தூங்குமோ இரு நேத்திரம் தாங்குமோ
இதயம் இனியும் சரணம்...(சின்ன)

காலை மாலை கேட்பதுந்தன் ஆலாபனம்
காலம் தோறும் காண்பதுந்தன் ஆராதனம்
உன்னைத் தீண்டும் கைகள்
வேறு பெண்ணைத் தீண்டி வாழாது
சங்கப் பாடல் என்றும் இங்கே
சந்தம் நீங்கிப் போகாது

காதலே ஒரு காவியம்
நீண்ட நாள் நிற்கும் ஓவியம்
கண்மணி என்னைக் கூட வா நாள் எல்லாம்
இதயம் இனியும் சரணம்,......(சின்ன)

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Parvathi Ennai Paradi

Keep listening

More from this movie

  1. Kaadhalil Maataamal காதலில் மாட்டாமல்

    Sung by Malaysia Vasudevan

  2. Kombugal Illa கொம்புகள் இல்லா காளையப் பாரு

    Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam

  3. Chinna Poongili சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி

    Sung by S. Janaki, S. P. Balasubramaniam

  4. Sooriyana Kandavudan சூரியனைக் கண்ட உடன்

    Sung by S. Janaki

  5. Parvathi Ennai Paradi பார்வதி என்னைப் பாரடி

    Sung by S. P. Balasubramaniam

  6. Vaanukkum Meenukkum மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்

    Sung by S. Janaki

  7. Muthu Therey முத்துத் தேரே தேரே

    Sung by K. S. Chithra, S. P. Balasubramaniam

  8. Valibare Valibare வாலிபரே வாலிபரே

    Sung by Malaysia Vasudevan