Song lyrics
Mangala Roopini
மங்கள ரூபிணி
24420 views
Singer · Unknown
Lyrics · Unknown
The lyrics
மங்கள ரூபிணி மதியொளி சூலினி
மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும்
சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல்
கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்கநிவாரணி காமாட்சி
கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக்
காத்திட வந்திடுவாள்
தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி
தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள் மாதவர் மொழியாள்
மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட
சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே
எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட
தண்மதி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட
கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறைஒலி கூவிட
பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக்
கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த
நல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
எண்ணியபடி நீ அருளிட வருவாய்
எம் குலதேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டி
கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
இடர் தருதொல்லை இனிமேல் இல்லை
என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி
ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி
ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி
ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
துக்க நிவாரணி காமாட்சி
துக்க நிவாரணி காமாட்சி
மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும்
சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல்
கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்கநிவாரணி காமாட்சி
கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக்
காத்திட வந்திடுவாள்
தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி
தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள் மாதவர் மொழியாள்
மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட
சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே
எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட
தண்மதி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட
கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறைஒலி கூவிட
பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக்
கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த
நல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
எண்ணியபடி நீ அருளிட வருவாய்
எம் குலதேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டி
கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
இடர் தருதொல்லை இனிமேல் இல்லை
என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி
ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி
ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி
ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
துக்க நிவாரணி காமாட்சி
துக்க நிவாரணி காமாட்சி
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Kantha Sasti Kavasam சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
-
Siva Puraanam சிவ புராணம்
-
Namachivaya Namachivaya Om நமச்சிவாயா நமச்சிவாயா
Sung by S. P. Bala
-
Aigiri Nandini Nandita அயிகிரி நந்தினி
-
Allitharum Pillaiyarai அள்ளித்தரும் பிள்ளையாரை
-
Unnai Paadum Tholil உனைப் பாடும் தொழிலின்றி
Sung by Seerkazhi Govindarajan
-
Vinayakane Vinai Theerpavane விநாயகனே வினை தீர்ப்பவனே
Sung by Seerkazhi Govindarajan
-
Sollatha Naal Illai சொல்லாத நாளில்லை
Sung by Seerkazhi Govindarajan
-
Kanthan Kaladiyai கந்தன் காலடியை
Sung by T. M. Soundararajan
-
Sollatha chella செல்லாத்தா செல்ல
Sung by L. R. Eswari
-
aayarpaadi Maalikaiyil ஆயர்பாடி மாளிகையில்
Sung by S. P. Balasubramaniam
-
Maaikka veenai மாணிக்க வீணை ஏந்தும்
-
Pillaiyar Suli Pottu பிள்ளையார் சுழி போட்டு
Sung by Seerkazhi Govindarajan
-
Harivaraasanam Vishvamohanam ஹரிவராஸனம் விஷ்வமோஹனம்
Sung by K. J. Yesudas
-
Unnaiyum Marapathundo உன்னையும் மறப்பதுண்டோ
Sung by T. M. Soundararajan
-
Kaakkum Kadavul காக்கும் கடவுள் கணேசனை
Sung by Seerkazhi Govindarajan
-
Neracha Manasu Unakuthan நெறஞ்சு மனசு உனக்குதாண்டி
-
Azlakentra Sollukku Muruka அழகென்ற சொல்லுக்கு முருகா
Sung by T. M. Soundararajan
-
Thanga Mayam Murukan தங்க மயம் முருகன்
Sung by Seerkazhi Govindarajan
-
Kuruvaayoorukku Vaarungal குருவாயூருக்கு வாருங்கள்
Sung by P. Susheela
-
Katpoora Nayakiye கற்பூர நாயகியே
-
Sakala Kala Valli Malai சகல கலாவல்லியே
-
Lingashtakam Tamil லிங்காஷ்டகம்
Sung by S. P. Balasubramaniam
-
Chinna Chinna Padam Vaithu சின்ன சின்ன பதம் வைத்து
Sung by K. Sivaangi
-
Rksha raksha jagan matha ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா
Sung by P. Susheela
-
Mangala Roopini மங்கள ரூபிணி
Sung by Unknown
-
Manikka veenai enthum மாணிக்க வீணை ஏந்தும்
Sung by Unknown
-
Thiruvilakkai etrivaithom திருவிளக்கை ஏற்றி வைத்தோம்
Sung by Unknown
-
Kalaivani nin karunai கலைவாணி நின் கருணை
Sung by Unknown
-
Jaya jaya devi ஜெய ஜெய தேவி
Sung by Unknown