Neracha Manasu Unakuthan artwork

Song lyrics

Neracha Manasu Unakuthan

நெறஞ்சு மனசு உனக்குதாண்டி

21828 views

The lyrics

நெறஞ்சு மனசு உனக்குதாண்டி மகமாயி
உன்னை நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி
மறைகளும் இதை சொல்லுமடி மகமாயி
கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி

நமையாளும் நாயகியாம் நல்மகமாயி
கண்ணிமை போல காத்திடுவாள் மகமாயி
உமையவள் அவளே இவமான் மகளே
சமயத்தில் வருபவள் அவளே
எங்கள் சமயபுரத்தாள் அவளே

இசைக்கலையாவும் தந்தருள வேண்டும்என் 
குலதெய்வமே மகமாயி
தஞ்சமென்று உன்னை சரணடைந்தேன்
தஞ்சை முத்துமாரி முந்தை வினைகளைக் களைந்தெறிவாள்
தாய் மயிலையிலே முண்டகக்கன்னி
கோலவிழி பத்திரகாளி
வேண்டும் வரம் தருவாள் என் தாய் ஏற்காட்டுக் கருமாரி

ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்
பார்த்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்
பார்த்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்

காத்தாயி மகமாயி கருணை தெய்வம் மாகாளி
நார்த்தா மலைவாழும் நார்த்தா மலைவாழும்
நார்த்தா மலைவாழும் எங்கள் நாயகியாம் திரிசூலி

ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்
பார்த்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
நெஞ்சினிலே நிறைந்திருப்பா நிம்மதியைத் தந்திடுவா
வஞ்சகரின் வாழ்வருப்பா வந்தவினை தீர்த்திடுவா
மஞ்சளிலே குளிச்சிருப்பா சிங்காரமா சிரிச்சு நிப்பா
மஞ்சளிலே குளிச்சிருப்பா சிங்காரமா சிரிச்சு நிப்பா
தஞ்சமென்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா
தஞ்சமென்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா

மல்லிகைச்சரம் தொடுத்து மாலையிட்டோம்
அரிசி மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலுமிட்டோம்
அம்மா துள்ளியே எந்தன் முன்னே வாருமம்மா அம்மா
தூயவளே எந்தாயி மாரியம்மா

பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியுமுனக்கு
பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்
பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியுமுனக்கு
பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு
எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே
எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில்
அந்நியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா
கண்ணீரைத் துடைத்துவிட ஓடிவாம்மா
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா
இந்த சின்னவனின் குரல் கேட்டு உன்முகம் திருப்பு
சிரித்தபடி என்னைதினம் வழியனுப்பு அம்மா

கண்ணிரண்டும் உன்னுருவைக் காணவேண்டும் அம்மா
காலிரண்டும் உன்னடியையே நாட வேண்டும்
பண்ணமைக்கும் நாவுனையே பாட வேண்டும் அம்மா
எல்லோரும் பக்தியுடன் கையெடுத்து உன்னையே 
கும்பிட வேண்டும் எண்ணமெல்லாம் 
உன் நினைவே ஆக வேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்

மண்ணடக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா
மண்ணளக்கும் தாயே குலதெய்வமே 
தொட்டியங்குளம் மாரியம்மாமா
மதுரையிலே தெப்பக்குள மாரியம்மா
விருதுநகரிலே முத்துமாரியம்மா
சிவகாசியிலே பத்திரகாளியம்மா
வீரபாண்டியிலே கெளமாரியம்மா
தாயமங்கலத்திலே முத்துமாரியம்மா
இருக்கன்குடியிலே மாரியம்மா
செந்தூரிலே சந்தன மாரியம்மா
ஆரல்வாய்மொழியிலே முப்பந்தலிலே இசக்கி மாரியம்மா
பெருங்கரையிலே சதுரங்கநாயகியம்மா
சிவகங்கையிலே வெட்டுடையார் காளியம்மா
திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா
மணப்பாறையிலே முத்துமாரியம்மா
திருச்சியிலே சமயபுரத்தம்மா வெக்காளியம்மா

சிறுவாச்சூர் மதுரகாளியம்மா
மண்ணளக்கும் தாயே
தஞ்சையிலே புண்ணைநல்லூர் மாரியம்மா
குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா
வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா
நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா
வேளாங்கன்னியிலே வேளங்கன்னியம்மா
திருத்துறைப்பூண்டியிலே முள்ளாச்சியம்மா
எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா
ஆரூரிலே சீதளாதேவி எள்ளம்மா
பட்டுக்கோட்டையிலே நாடியம்மா
அறந்தாங்கியிலே வீரமா காளியம்மா
திருவப்பூர் மாரியம்மா
கொண்ணையூர் மாரியம்மா
காரைக்குடியிலே கொப்புடைய நாயகியம்மா
கண்கொடுக்கும் தெய்வமே
நாட்டரசன்கோட்டை வாழும் என் கண்ணாத்தாள்

மண்ணளக்கும் தாயே
படவேட்டிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மா
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியம்மா
வெட்டுவானம் எல்லையம்மா
செங்கையிலே மனப்பாக்கம் கன்னியம்மா
செங்கையிலே நாகாத்தம்மா

மண்ணளக்கும் தாயே
சென்னையிலே மயிலையிலே
அருள்மிகு தேவி முண்டகக்கன்னியம்மா
கோலவிழி பத்ரகாளியம்மா
அல்லிக்கேணியிலே எல்லம்மா
புரசையிலே பாதாள பொன்னியம்மா
மாம்பலத்திலே முப்பாத்தம்மா
வடசென்னையிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா

மண்ணளக்கும் தாயே
சேலத்திலே அன்னதான மாரியம்மா
ஈரோட்டிலே சின்ன மாரி பெரிய மாரியம்மா
கோவையிலே தண்டுமாரியம்மா கோணியம்மா
சத்யமங்கலத்திலே பண்ணாரி மாரியம்மா

மண்ணளக்கும் தாயே
காசி விசாலாக்ஷியம்மா
வங்காளத்திலே காளியம்மா
விஜயவாடாவிலே கனகதுர்க்கையம்மா
கர்நாடக மாநிலத்திலே
அன்னை சாமுண்டீஸ்வரி சாரதாம்பிகை மூகாம்பிகையம்மா
தங்கவயலிலே கங்கையம்மா

மண்ணளக்கும் தாயே
கேரளத்திலே சோட்டாணிக்கரை பகவதியம்மே
கொடுங்கல்லூர் பகவதியம்மே

மண்ணளக்கும் தாயே
மலேசிய நாட்டிலேமகா மாரியம்மா
சிங்கப்பூரிலே வீரமா காளியம்மா

இவையணைத்தும் ஒன்று சேர்ந்த சக்தி சொரூபமே
அம்மா திருவேற்காட்டில் வாழ் கனவிலும் நினைவிலும்
இவன் தொழும் என் சத்திய தெய்வமே கருமாரியம்மா

கருமாரியம்மா இந்த மகனுடைய குறைகளையும்
கவலைகளையும் தீரடியம்மா அம்மா
அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா

அம்மா கற்பூர நாயகியே கனகவல்லி
காளிமகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வள்ளி தெய்வயானையம்மா
விற்கோல வேதவள்ளி விசாலக்ஷி
விழிக்கோல மாமதுரை மீனாக்ஷி
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே
அம்மா சுழலாக வாழ்விப்பாய் எம்மை நீயே

புவனமுழுதாடுகின்ற புவனேஸ்வரி
புறமிருந்தோர் புறமிருக்கும் பரமேஸ்வரி
நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி
அம்மா நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி
கவலைகளைத் தீர்த்து வைக்கும் காளீஸ்வரி
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி
புவமான பரம்பொருளே ஜெகதீஸ்வரி
அம்மா உன்னடிமை சிறியேனை நீ ஆதரி

நெற்றியில் உன் குங்குமமே நிறைய வேண்டும்
நெஞ்சில் உன் திருநாமம் பதிய வேண்டும்
கற்றதெல்லாம் மென்மேலும் பெருக வேண்டும்
கவிதையிலே உன் நாமம் பாட வேண்டும்
சுற்றமெல்லாம் நீடூழி வாழ வேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்
மற்றதெல்லாம் நானுக்குச் சொல்லலாமா
மடிமீதில் பிள்ளை என்னைத் தள்ளலாமா

அன்னைக்கு உபசாரம் செய்வதுமுண்டோ
அதுசெய்து இந்நேரம் ஆவதுமுண்டோ
கண்ணுக்கு இமையின்றி காவலுமுண்டோ
அம்மா கன்றுக்கும் பசுவின்றி சொந்தமுண்டோ
முல்லைக்கும் பிள்ளைக்கும் பார்ப்பதுமுண்டோ
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ
எண்ணைக்கும் விளக்குக்கும் மீதமுண்டோ
அம்மா என்றைக்கும் நானுந்த பிள்ளையன்றோ
அன்புக்கே நானடிமை ஆக வேண்டும்
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்
அம்மா வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்

பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நாங்களென்றும் பணிய வேண்டும்
என் பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்
அம்மா என் நாவில் நீ என்றும் பாட வேண்டும்

கும்பிடவோ கையிரண்டு போதவில்லை
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை
செம்பவழ வாயழகி உன்னெழிலோ
இவன் சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை

அம்பரமே விழியாளே உன்னை என்றும்
இவன் அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை

காற்றாகி கனலாகி கடலாகினாய்
கயிறாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகி பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
பாடாத நாளில்லை தாயே உன்னை
அம்மா தினம் உன்னை பாடாத நாளில்லை
கருமாரி மகமாயி

பொருளோடு புகழோடு நோய் நொடி
இல்லாமல் எல்லோரையும் வைப்பாய் அம்மா அம்மா

வேற்காடு ஆலயத்தில் மூலஸ்தானத்தில் 
சரவிளக்கு சுடர் விடவே
சாற்றிய மாலையெல்லாம் உருமறைக்க
அம்மாவுக்கு அர்ச்சகர்கள்

ஓம் அகாரதக்சராகாளாயை நமஹ
ஓம் அன்னபூர்ணாயை நமஹ
ஓம் அம்பிகாயை நமஹ
ஓம் அங்காளபரமேஸ்வர்யை நமஹ
ஓம் ஆஜ்யந்த லஹிதாயை நமஹ
ஓம் இச்சாக்ருதையே நமஹ
ஓம் ஈஸ்வர ப்ரிய வல்லபாயை நமஹ
ஓம் ராஜ ராஜேஸ்வரி ரூபாயை நமஹ
ஓம் ராமதாசார்ய வஞ்சிதாயை நமஹ
ஓம் கிருஷ்ணமாயை நமஹ

அம்மாவுக்கு அர்ச்சனை செய்து
கற்பூரம் காட்டி கைதொழுதால்
கணத்தினிலே எங்கிருந்தாலும் 
ஓடி வருவாள் தேவி கருமாரி

கிங்கிணி கிலுகிலுக்க கால் சலங்கை சலசலக்க
கிங்கிணி கிலுகிலுக்க கால் சலங்கை சலசலக்க
உடலெல்லாம் சிலுசிலுக்க உன் சிரிப்பொலி கேட்குதம்மா
எங்கள் சிந்தை குளிருதம்மா அம்மா

உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா 
இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தாள் உன்னைக் காணாட்டா
இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா

உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா
எங்கள் ஆதிசக்தி மாதா கருமாரி ஆத்தா

தீ மிதித்து வந்திடுவார் பக்தர்களும் உனை நாடி
தீ மிதித்து வந்திடுவார் பக்தர்களும் உனை நாடி
தேவி உனை பாடி வரும் அன்பர்களும் பல கோடி
தீ மிதித்து வந்திடுவார் பக்தர்களும் உனை நாடி
தேவி உனை பாடி வரும் அன்பர்களும் பல கோடி

புற்றினிலே பாலூற்றி பணிந்திடுவார் பல கோடி
புற்றினிலே பாலூற்றி பணிந்திடுவார் பல கோடி
சக்தி உமை நாயகியே சங்கரியே கருமாரி
சக்தி உமை நாயகியே சங்கரியே கருமாரி

ஆதிசக்தி மாதா கருமாரி ஆத்தா
எங்கள் ஆதிசக்தி மாதா கருமாரி ஆத்தா

உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பிலே
அம்மா உமையவளே என் தாயி மாரியம்மா
பூவாடை வீசுதம்மா பூமகளே உனக்கு
பாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா
உனக்கு பாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா

சம்யபுரத்தாளே மாரியம்மா அம்மா சங்கரியே
எந்தன் முன்னே வாருமம்மா
தொல்லைகளை அகற்றும் தெய்வமே மாரியம்மா
தொட்டியங்குளம் வாழும் மாரியம்மா
வேற்காடு தன்னிலிருக்கும் மாரியம்மா
எனக்கு வேண்டும் வரம் தருபவளே மாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்
பார்த்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்
பார்த்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்

கற்பூர நாயகியே கனகவல்லிகாளி மகமாயி கருமாரியம்மா
கருமாரியம்மா கருமாரியம்மா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Tamil Devotional

Keep listening

More from this movie

  1. Kantha Sasti Kavasam சஷ்டியை நோக்கச் சரவணபவனார்

  2. Siva Puraanam சிவ புராணம்

  3. Namachivaya Namachivaya Om நமச்சிவாயா நமச்சிவாயா

    Sung by S. P. Bala

  4. Aigiri Nandini Nandita அயிகிரி நந்தினி

  5. Allitharum Pillaiyarai அள்ளித்தரும் பிள்ளையாரை

  6. Unnai Paadum Tholil உனைப் பாடும் தொழிலின்றி

    Sung by Seerkazhi Govindarajan

  7. Vinayakane Vinai Theerpavane விநாயகனே வினை தீர்ப்பவனே

    Sung by Seerkazhi Govindarajan

  8. Sollatha Naal Illai சொல்லாத நாளில்லை

    Sung by Seerkazhi Govindarajan

  9. Kanthan Kaladiyai கந்தன் காலடியை

    Sung by T. M. Soundararajan

  10. Sollatha chella செல்லாத்தா செல்ல

    Sung by L. R. Eswari

  11. aayarpaadi Maalikaiyil ஆயர்பாடி மாளிகையில்

    Sung by S. P. Balasubramaniam

  12. Maaikka veenai மாணிக்க வீணை ஏந்தும்

  13. Pillaiyar Suli Pottu பிள்ளையார் சுழி போட்டு

    Sung by Seerkazhi Govindarajan

  14. Harivaraasanam Vishvamohanam ஹரிவராஸனம் விஷ்வமோஹனம்

    Sung by K. J. Yesudas

  15. Unnaiyum Marapathundo உன்னையும் மறப்பதுண்டோ

    Sung by T. M. Soundararajan

  16. Kaakkum Kadavul காக்கும் கடவுள் கணேசனை

    Sung by Seerkazhi Govindarajan

  17. Neracha Manasu Unakuthan நெறஞ்சு மனசு உனக்குதாண்டி

  18. Azlakentra Sollukku Muruka அழகென்ற சொல்லுக்கு முருகா

    Sung by T. M. Soundararajan

  19. Thanga Mayam Murukan தங்க மயம் முருகன்

    Sung by Seerkazhi Govindarajan

  20. Kuruvaayoorukku Vaarungal குருவாயூருக்கு வாருங்கள்

    Sung by P. Susheela

  21. Katpoora Nayakiye கற்பூர நாயகியே

  22. Sakala Kala Valli Malai சகல கலாவல்லியே

  23. Lingashtakam Tamil லிங்காஷ்டகம்

    Sung by S. P. Balasubramaniam

  24. Chinna Chinna Padam Vaithu சின்ன சின்ன பதம் வைத்து

    Sung by K. Sivaangi

  25. Rksha raksha jagan matha ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா

    Sung by P. Susheela

  26. Mangala Roopini மங்கள ரூபிணி

    Sung by Unknown

  27. Manikka veenai enthum மாணிக்க வீணை ஏந்தும்

    Sung by Unknown

  28. Thiruvilakkai etrivaithom திருவிளக்கை ஏற்றி வைத்தோம்

    Sung by Unknown

  29. Kalaivani nin karunai கலைவாணி நின் கருணை

    Sung by Unknown

  30. Jaya jaya devi ஜெய ஜெய தேவி

    Sung by Unknown