Song lyrics
Indha Iravu Theervadharkullae
இந்த இரவு தீர்வதற்குள்ளே
11868 views
Singer · RP Shravan
Lyrics · Vairamuthu
The lyrics
இந்த இரவு தீர்வதற்குள்ளே...
ஒருகோடி மொட்டுக்கள்
உடைந்திருக்கும்
ஒன்றிரண்டு விண்மீன்கள்
உதிர்ந்திருக்கும்
எத்தனையோ கருப்பையில்
உயிர்த்திரவம் விழுந்திருக்கும்
எத்தனையோ படுக்கைகளில்
நோய்த்துன்பம் முடிந்திருக்கும்
உன்னைநான் முத்தமிடத்
தடையுண்டோ பைங்கிளி?
உனக்கும் எனக்கும் ஏன்
சமூக இடைவெளி?
இந்த இரவு தீர்வதற்குள்ளே...
மென்காற்று கண்டங்கள்
கடந்திருக்கும்
வெண்ணிலவு ஒருகீற்று
வளர்ந்திருக்கும்
கண்ணாடிக் கோப்பைகளும்
கன்னிமையும் உடைந்திருக்கும்
முன்னிரவில் பலர்செய்த
பாவங்கள் மறந்திருக்கும்
உயிர் ரெண்டும் இடம்மாறத்
தழுவாயோ பைங்கிளி?
உனக்கும் எனக்கும் ஏன்
சமூக இடைவெளி?
இந்த இரவு தீர்வதற்குள்ளே...
அழகான கவிதைவரி
விழுந்திருக்கும்
அரசாங்கச் சதியொன்று
முடிந்திருக்கும்
சிறைவாசக் கைதிக்கு
நாளொன்று குறைந்திருக்கும்
சேயொன்று கருப்பையில்
சிலபொழுது புரண்டிருக்கும்
உறவேதும் நேராமல்
பிரிவாயோ பைங்கிளி?
உனக்கும் எனக்கும் ஏன்
சமூக இடைவெளி?
ஒருகோடி மொட்டுக்கள்
உடைந்திருக்கும்
ஒன்றிரண்டு விண்மீன்கள்
உதிர்ந்திருக்கும்
எத்தனையோ கருப்பையில்
உயிர்த்திரவம் விழுந்திருக்கும்
எத்தனையோ படுக்கைகளில்
நோய்த்துன்பம் முடிந்திருக்கும்
உன்னைநான் முத்தமிடத்
தடையுண்டோ பைங்கிளி?
உனக்கும் எனக்கும் ஏன்
சமூக இடைவெளி?
இந்த இரவு தீர்வதற்குள்ளே...
மென்காற்று கண்டங்கள்
கடந்திருக்கும்
வெண்ணிலவு ஒருகீற்று
வளர்ந்திருக்கும்
கண்ணாடிக் கோப்பைகளும்
கன்னிமையும் உடைந்திருக்கும்
முன்னிரவில் பலர்செய்த
பாவங்கள் மறந்திருக்கும்
உயிர் ரெண்டும் இடம்மாறத்
தழுவாயோ பைங்கிளி?
உனக்கும் எனக்கும் ஏன்
சமூக இடைவெளி?
இந்த இரவு தீர்வதற்குள்ளே...
அழகான கவிதைவரி
விழுந்திருக்கும்
அரசாங்கச் சதியொன்று
முடிந்திருக்கும்
சிறைவாசக் கைதிக்கு
நாளொன்று குறைந்திருக்கும்
சேயொன்று கருப்பையில்
சிலபொழுது புரண்டிருக்கும்
உறவேதும் நேராமல்
பிரிவாயோ பைங்கிளி?
உனக்கும் எனக்கும் ஏன்
சமூக இடைவெளி?
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Future Pondati வாடியே காதலியே
-
En Punnagai Needhanadi என் புன்னகை நீதான்டி
Sung by Surya infiusics
-
Hero Motor Song மனம் மெல்ல மெல்லத் துடிக்குதே
Sung by A. R. Rahman
-
Enjoy Enjaami Enjoy எஞ்சாமி
Sung by Dhee (Dheekshitha)
-
Kannal Pesi Pesi Kollathe கண்ணாலே பேசி பேசி கொல்லாதே
Sung by Vijay Prakash
-
Kutty Pattas என் குட்டி பட்டாசே
Sung by Santhosh Dhayanidhi, Rakshita Suresh
-
Asku Maaro அஸ்கு மாரோ
Sung by K. Sivaangi, Dharan Kumar
-
Indha Iravu Theervadharkullae இந்த இரவு தீர்வதற்குள்ளே
Sung by RP Shravan
-
Loner லோனர்
Sung by Anand Aravindakshan, Nalini Vittobane
-
Thappu Pannitten தப்பு பண்ணிட்டேன்
Sung by Silambarasan
-
Bathroom - Kadhasolla naanum கதை சொல்ல நானும்
Sung by Madan Gowri, ofRo, Asal Kolaar
-
Adi Penne அடி பெண்ணே ஒரு முறை
Sung by Stephen Zechariah ft. Srinisha Jayaseelan
-
Hallelujah காலையும் மாலையும் அல்லே-லூயா
Sung by John Jebaraj
-
Naan Un Paadal Ne En Thedal நான் உன் பாடல் நீ என் தேடல்
Sung by Unknown
-
Adipoli Adi poli அடி போலி
Sung by Vignesh Ramakrishna, K. Sivaangi
-
Adi penne reprise அடி பெண்ணே
Sung by Stephen Zechariah
-
Sollatha Kadhal Ellam Kallaraiyil சொல்லாத காதல் எல்லாம் கல்லறை
Sung by Srinisha Jayaseelan, Stephen Zechariah
-
Ora Siricha ஓர சிரிச்சா
Sung by M. M. Manasi, Srinisha Jayaseelan, Stephen Zechariah