Poonkatre Poonkatre artwork

Song lyrics

Poonkatre Poonkatre

பூங்காற்றே பூங்காற்றே

12564 views

Singer · K. J. Yesudas

The lyrics

பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறைகள் சொல்கிறது
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது
அடி பாரதி கண்ணம்மா மணம் கலங்குவதேனம்மா
பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

வெறும் கோயில் இங்கே ஏன்மா விளக்கேற்றினாய்
விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய்
விளையாத மண்ணில் ஏம்மா விதை தூவினாய்
வெயிற்கால கானல் நீரில் வலை வீசினாய்
அறியாமல் பிழை செய்தாய்
மணலாலே சிலை செய்தாய்
அடி பாரதி கண்ணம்மா இது பாழ்பட்ட மண்னம்மா
பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு

வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம்
வளையாடும் கைகள் தொட்டு விளையாடலாம்
இடைவேளை போலே இந்த பிரிவாகலாம்
இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம்
இளம்பூவே வருந்தாதே
உலகம் தான் திருந்தாதே
அடி பாரதி கண்ணம்மா நீ பாரத பெண்னம்மா
பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறைகள் சொல்கிறது
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது
அடி பாரதி கண்ணம்மா மணம் கலங்குவதேனம்மா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Bharathi Kannamma

Keep listening

More from this movie

  1. Vaady Patti Melamada வாடிப்பட்டி மேளமடா

    Sung by Gangai Amaran

  2. Thendralukku Theriyuma தென்றலுக்கு தெரியுமா

    Sung by Arun Mozhi, K. S. Chithra

  3. Retakili Rekkai ரெட்டகிளி ரெக்கை

    Sung by Mano, S. P. Sailaja

  4. Rayula Bullet Railu ரயிலு ரயிலு ஜப்பானின்

    Sung by Chandrabose

  5. Poonkatre Poonkatre பூங்காற்றே பூங்காற்றே

    Sung by K. J. Yesudas

  6. Naalethu Padhuchavare நாலெழுத்து படிச்சவரே

    Sung by Swarnalatha

  7. Chinna Chinna Kanamma சின்ன சின்ன கண்ணம்மா

    Sung by Harini